தென்னைக்கு நீர் மேலாண்மை

இன்று தமிழ்நாட்டில் தென்னை மகசூல் குறைந்து வருகிறது. பலர் சரிவர உரம் போடாமல், மரங்களை பழுது பார்க்காமல், நீர் மேலாண்மை பற்றி அறியாமல் உள்ளனர். இதுவே மகசூல் குறைவுக்குக் காரணம்.

நீரின் அவசியமும், வேரின் அமைப்பும்:

  • வேரின் அமைப்புக்களை நன்கு தெரிந்து கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
  • மர 90% வேர்கள் 2 மீட்டர் ஆர வட்ட பரப்பளவிற்குள் அதாவது 12.5 ச.மீ. உள்ளேயே காணப்படும்.
  • 15 மீ ஆழம் வரை 4000 முதல் 7000 வேர்கள் சம மட்டத்தில் அமைந்திருக்கும்.
  • தென்னை நட்ட முதல் வருடம் ஒருநாள் விட்டு ஒருநாள் 10 லி தண்ணீரும், மூன்று வயது வரை வாரம் இருமுறை 40லி தண்ணீரும், பின் வாரம் 60லி தண்ணீரும் பாய்ச்ச வேண்டும்.
  • 2 மீட்டர் ஆர வட்டப்பகுதிக்கு மட்டும் நீர் பாய்ச்ச வேண்டும்.
  • வட்டப்பாத்தி முறை, பானைவழி நீர்ப்பாசனம், சொட்டுநீர்ப்பாசனம் ஆகிய முறைகளில் நீர்ப்பாசனம் செய்யலாம்.
  • சொட்டு நீர் குழாயின் மூலம் உரம் செலுத்தப்படுவதால், இம்முறை சிறப்பானது.
  • மணற்பாங்கான நிலத்திற்கு வண்டல், குறைத்து பொருக்கு மரத்திற்கு 200 கிலோ இடலாம்.
  • பசுந்தாள் உரம், நார்க் கழிவுகள், மக்கிய எரு இட்டால் நீர்ப்பிடிப்பு அதிகரிக்கும்.
  • மண்ணின் ஈரப்பதத்தை பராமரிக்க வேண்டும்.
  • மழைக்கால தொடக்கத்தில் தோப்புகளை உழவு செய்ய வேண்டும்.
  • நல்ல வடிகால் வசதி தென்னைக்கு அவசியம்.காரணம் வடிகால் இல்லாவிடில் தண்ணீர் தேங்கி விடும்.
  • நீரும் உரமும் சரிவர விஞ்ஞான முறைப்படி வழங்காவிடில் மகசூல் குறைந்து விடும்.

எம்.ஞானசேகர், விவசாய ஆலோசகர்: 09380755629

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “தென்னைக்கு நீர் மேலாண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *