தென்னையில் இளங்காய்கள் உதிர்தலை தடுப்பது எப்படி?

தென்மேற்கு பருவகாலங்களில் பைடோப் தோரா பாலிமிவோரர் பூசணம், இளங்காய்கள் உதிர்வதற்கு காரணமாகிறது.

அறிகுறிகள்:

  • காய்களின் மேல், அடிப்பகுதியில் வண்ணம் மாறுதல் (பழுப்பு) மற்றும் காய்களின் அரைப்பகுதி வரை பரவியிருத்தல்.
  • காய்களின் உட்திசுக்கள் மிக மிருதுவாக இருத்தல்.
  • அழுகிய பருப்புகளிலிருந்து துர்நாற்றம் வீசும்.
  • பொதுவாக காய் உதிர்வு ஜனவரி-பிப்ரவரி, ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் ஏற்படுகிறது.
  • சாறு உறிஞ்சும் பூச்சி வகை கள், எறும்புகள், பறவைகள் மற்றும் எலிகள் போன்ற இதர காரணங்களாலும் காய் உதிர்வு ஏற்படுகிறது.

காய்உதிர்வு மேலாண்மை:

  • ஒரு சத போர்டோ கலவையை பருவமழைக்கு முன்னும் பின்னும் தெளிக்க வேண்டும்.
  • மரத்தின் கொண்டைப்பகுதியினை சுத்தம் செய்தல், உதிர்ந்த காய்களை எரித்தல், டிடிடி மற்றும் குளோரிமேன் பூச்சிகொல்லியை பயன்படுத்துதல், பாராக்வாட் களைக்கொல்லியை தண்டின் அடிப்பகுதியில் இடவேண்டும்.
  • எறும்பு புற்றுகளை கட்டுப்படுத்த டை எல்ட்ரின் தண்டின் அடிப்பகுதியில் இடவேண்டும்.

மேலும் விபரங்களுக்கு -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன், கேடிசி பயோ டெக்னாலஜி பெர்டிலைசர்ஸ், கோவை, 0422420 2040, 09363152441, 93457 28306.

தென்னையை பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்

நன்றி: தினமலர்



பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *