தென்னையில் ஊடு பயிராக கோகோ

தோட்டக்கலைத் துறை, தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில், கோகோவை ஊடு பயிராக அறிமுகப் படுத்தி உள்ளது.இதன் மூலம் ஹெக்டேருக்கு, 75 ஆயிரம் ரூபாய் வரை உபரி வருவாய் கிடைக்கும் என, தாட்டக்கலைத் துறை தெரிவித்து உள்ளது.
சாக்லெட், உணவுப் பொருட் கள், பானங்கள், மருந்துகள் ஆகியவற்றில் கோகோ பயன்படுகிறது. கோகோவின் தேவை ஆண்டுதோறும், 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.
இதன் தேவை, உற்பத்தியின் அளவை விட, அதிகமாக இருப்பதால், 60 முதல் 70 சதவீதம் வரை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
உலகத்தில் கோகோ உற்பத்தியில், இந்தியாவின் பங்கு, 0.3 சதவீதம் மட்டுமே. தமிழகத்தில், 2,500 ஹெக்டேரில் கோகோ பயிரிடப்பட்டு, ஆண்டுதோறும், 200 டன் கோகோ உலர் விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தற்பாது, கோவை, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கோகோ பயிரிடப்பட்டு உள்ளது. கோகோ பயிர் வளர்வதற்கு தேவையான தட்பவெப்ப சூழ்நிலையும், வசதி, வாய்ப்பும் திருவள்ளூர் மாவட்டத்தில் சாதகமாக உள்ளதாக, தாட்டக் கலைத் துறை கருதுகிறது.
இது குறித்து, மாவட்ட தோட்டக்கலைத் துறையின், துணை இயக்குனர், ரஞ்சன் பால் கூறியதாவது:

  •  ஒரு ஹெக்டேருக்கு 500 செடிகள் வரை நடலாம்.
  • ஒவ்வொரு செடிக்கும், 3 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலம் விட வேண்டும்.
  •  50 சதவீத நிழல் இருத்தல் அவசியம்.
  • ஒரு செடி, நான்கு ரூபாய் என்ற விலையில் கிடைக்கும்.
  • செடிகளை வாங்கி, அவற்றை நட, ஹெக்டேருக்கு, 12,500 ரூபாய் செலவாகும்.
  • செடி வைத்த, நான்கு ஆண்டுகளில் அறுவடை செய்யலாம்.
  • அரசு மானியம், ஹெக்டேருக்கு 12,000 ரூபாய் வழங்கப்படும்.
  • இதன் மூலம் விவசாயிக்கு ஆண்டுக்கு ஒரு ஹெக்டேரில், 75 ஆயிரம் ரூபாய் உபரி வருவாய் கிடைக்கும். ஆர்வமுள்ள விவசாயிகள் மேலும் தகவல் பெற, 09840460393 எனது அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு ரஞ்சன் பால் கூறினார்.
கோகோ பயிர் புதியது என்பதால், இதன் தொழில்நுட்பம் குறித்து தோட்டக்கலைத் துறையினருக்கு தனியார் சாக்லெட் நிறுவனம் கடந்த வாரம் பயிற்சி அளித்து உள்ளது. தென்னை பயிரில் ஊடு பயிராக எப்படி இதை நடுவது, பராமரித்தல், உரம் வைத்தல் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அவர்கள் தெரிவித்தனர்.
நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *