தென்னையில் மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்தல் செய்வது எப்படி?

விவசாயிகளுக்கு உதவும் வகையில் தொழில்நுட்ப மிஷன் எனப்படும் திட்டத்தின் மூலம் நிதி உதவி வழங்குகிறது தென்னை வளர்ச்சி வாரியம். மானியத்தோடு பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்கிறார்கள்.

அக்மார்க் தரத்தில் தேங்காய் எண்ணெய், தேங்காய் பவுடர் உற்பத்தி செய்வது, கொட்டாங்குச்சியை பயன்படுத்தி ஆக்டிவேட்டட் கார்பன் தயாரிப்பது, இளநீரில் வினிகர் தயாரிப்பது, இளநீரை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்வது, தேங்காய் உலர்த்தும் இயந்திரம் வாங்குவது என்று பல்வேறுவிதமான செயல்களுக்கு நிதிஉதவி வழங்கப்படுகிறது.

அதிக பட்சமாக ரூ.50 லட்சம் வரை மானியமாக வழங்குகிறார்கள். தனிப்பட்ட விவசாயிகளுக்கும் விவசாய குழுக்களுக்கும் இந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் விவசாயிகளின் பண்ணையை நேரடியாக பார்வையிட்டு உரிய தகுதிகள் இருக்கும் பட்சத்தில் நிதி உதவி வழங்குவார்கள். தனி விவசாயிக்கு ரூ.10 லட்சம் வரையிலும், விவசாயக் குழுக்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.25 லட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் மூலம் நிதி உதவி பெற விரும்புபவர்கள் கொச்சியில் உள்ள தென்னை வளர்ச்சி வாரியத்தை தொடர்பு கொள்ளலாம். சேர்மன், கோகனட் டெவலப்மென்ட் போர்டு, கேரளா பவன், கொச்சின்-682 011.

தொலை பேசி எண்கள்: 04842376265, 04842377267, 04842376553 மற்றும் 04842375266.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “தென்னையில் மதிப்புக்கூட்டிய பொருட்களை தயாரித்தல் செய்வது எப்படி?

  1. Ambigapathi says:

    அன்பார்ந்த அய்யா,வணக்கம்.நான்கடலூர்மாவட்டம்,சிதம்பரம் வட்டம் முகையூர் என்ற சிற்றூரில் வசித்து வருகின்றேன்.எங்கள்பகுதி களிமண்நிறைந்த பகுதி.இங்கு நெல் வகை பயிற்கள் மட்டுமே பயிரிடப்பட்டு வருகின்றனர்.நான் 200 தென்னை கன்றுகளை நட்டு சுமார் 15 வருடங்கள் ஆய்கின்றது .நன்செய்நிலத்தில் 20 அடி இடைவெளியில் மண்குவியல் ஏற்படுத்தி (முட்டு)இக்குவியலில் மரங்களை நட்டுள்ளேன்.மழைகாலங்களில் தண்ணீர் தேங்கிவிடும் என்பதால் இத்தகைய நிலை ஏற்பட்டது.இச்சூழலில் கோடைகாலங்களில் தண்ணீர்பற்றாகுறையினால் மரங்கள் சரியாகவும் வளரவில்லை,காய்ப்பும் சரியில்லை.கடந்த ஆண்டு நிலத்தடி குழாய் மூலம் நீர்பாசனவசதி ஏற்படுத்தி தேவைக்கு ஏற்ப தண்ணீர் பாய்ச்சியதால் தற்பொழுது மரம் ஓரளவிற்கு நல்ல நிலையில் உள்ளது.காய்ப்பும் கணிசமான அளவிற்கு உள்ளது.மரத்தில் களைகள்உள்ளன.களைகளை அகற்ற பயிற்சிபெற்ற ஆட்கள் இல்லை.களை எடுப்பதற்கான கருவிகள் ஏதேனும் நடைமுறையில் உள்ளதா?.அவ்வாறு இருப்பின் இதற்கான விவரங்களை கூறவும். மேலும் தேங்காய் பறிக்க கருவிகள் பற்றிய விவரங்களுக்கு யாரை அணுகுவது.சிறு விவசாய தென்னை வளர்ப்புக்கு உரய ஆலோசனை மற்றும் மானிய உதவிகள் பற்றி கருத்துரை வழங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *