தென்னை தோட்டத்தில் அதிக வருமானம் பெறுவது எப்படி?

தென்னை தோட்டத்தில், ஊடு பயிர்களாக காய்கறிகளும், பயறுகளும், வாழை, அன்னாசி போன்றவற்றை பயிர் செய்து அதிக மகசூல் பெற்றுள்ளார், கேரளாவில் உள்ள ஒரு விவசாயி. இந்த முறையை ஆதரிக்கிறார், காசரகோடில் உள்ள Central Plantation Crops Research Institute நிறுவனத்தின் இயக்குனர் ஆனா Dr  வ. ராஜகோபால் அவர்கள்.

காய்கறிகளும், பயறு வகைகளும் சிறுகிய காலத்தில் பயன் அளிக்கும் என்றும, வாழை போன்றவை தென்னை தோட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் பயன் அளிக்கும் என்கிறார் அவர். தென்னை மரங்கள் காய்க்க சில வருடங்கள் ஆகும் என்பதால், அவை காய்க்க முன் விவசாயிகளுக்கு வாழை போன்றவை வருவாய் கொடுக்கும். மேலும், ஊடு பயிர்களின் இலைகள் தென்னை மரத்துக்கு நல்ல எருவாகும்.

கேரளாவை சேர்ந்த திரு மணியணி 110 தென்னை மரங்கள் உள்ள தோட்டம் வைத்திருக்கிறார். அவற்றில், 75 காய்கின்றன. இந்த தோட்டத்தில் ஊடு பயிராக வாழை, மரவள்ளி கிழங்கு, வெண்டைக்காய் ஆகியவற்றை பயிரிட்டு, அவர், வருடத்தில், ரூ 12000 வரை சம்பாதிக்கிறார். நேந்திரன் வாழை இப்படி பட்ட ஊடு பயிராக, நன்றாக வருகிறது. அவர், 75  நேந்திரன் வாழை மரங்களை 0 .25  ஏக்கரில் பயிருட்டு, அதன் மூலம் ரூ 6400 வருடம் கிடைக்கிறது. சில பாக்கு மரங்களையும் அவர் தென்னை மரங்களுக்கு இடையில் பயிரிடுகிறார்.

மேலும் விவரங்களுக்கு, திரு குன்ஹம்பு மணியணி, கண்டத்தில் இல்லம், பாக்கம் போஸ்ட், பின்கோடு 671316  காசரகொத் மாவட்டம், தொலைபேசி: 046722275407 அணுகவும்

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “தென்னை தோட்டத்தில் அதிக வருமானம் பெறுவது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *