தென்னை நார் கழிவுகள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி

வேண்டாத கழிவுகளாக கருதப்பட்ட தென்னை நார் கழிவுகள் தற்போது அரபுநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
தேனி மாவட்டத்தில் தென்னை நார் கயிறு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இவற்றில் இருந்து கிடைக்கும் நார் கழிவுகள் வேண்டாத பொருளாக கருதப்பட்டதால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் மொத்தமாக காலியிடத்தில் கொட்டி எரித்தனர். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த தென்னை நார்க் கழிவுகள் அரபு நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகிறது.

  • இதனால், தற்போது மதிப்பு மிகுந்த பொருளாக கருதப்படுகிறது.
  • தென்னை மட்டையில் இருந்து தயாராகும் மஞ்சு (தும்பு) (Cocopeat) தனது எடையை விட ஆறு மடங்கு அதிக தண்ணீரை தன்னுள் ஈர்க்கும் தன்மை கொண்டது.
  • எனவே, தண்ணீர் பற்றாக்குறை உள்ள அரசு நாடுகளில் மரங்களை சுற்றிலும் தென்னை மஞ்சுவை கொட்டி நீர் பாய்ச்சுகின்றனர்.
  • நீரை உறிஞ்சிக் கொள்ளும் மஞ்சு பலநாட்கள் ஈர நிலையில் இருக்கும்.
  • இதனால் மரங்கள் வேர்கள் மூலம் மஞ்சுவிடம் இருந்து தண்ணீரை உறிஞ்சிக் கொள்கின்றன.
  • இந்த புதிய தொழில்நுட்பம் அரபு நாடுகளின் அதிகளவில் கடைபிடிக்கப்படுகிறது.
  • இதற்காக தேனி மாவட்டத்தில் இருந்து தென்னை நார் கழிவுகள் அதிகளவில் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.
  • நம் நாட்டிலும் வறண்ட பகுதிகளில் மரங்கள், பழப்பயிர் சாகுபடி செய்பவர்களுக்கு இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.
  • இதனால் தென்னை நார் கழிவுகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
  • தற்போது தேனி மாவட்டத்தில் எந்த கயிறு தொழிற்சாலையிலும், கழிவுகளை வெளியே கொட்டி தீ வைப்பதில்லை.
  • மொத்தமாக சேர்த்து டன் ரூ.7,500க்கும் மேல் வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். அவர்கள் அதை பக்குவப்படுத்தி டன் 20 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் அரபுநாடுகளுக்கு விற்று லாபம் சம்பாதிக்கின்றனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *