சம்பா நெல்பயிரில் விதை நேர்த்தி

நெல் பயிரிடும் விவசாயிகள் விதை நேர்த்தி செய்து விதைக்கும்படி கருங்குளம் வேளாண்மை அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

சம்பா நெற்பயிர் சாகுபடியில் விதை நேர்த்தி செய்து வீரியமான விதைகளை தெரிவு செய்வதன் மூலம்,  விதை மூலம் பரவும் பூச்சி, நோய் தாக்குதலை குறைத்து அதிக மகசூல் பெறலாம்.

நெல்பயிரில் விதை நேர்த்தி முறை:

  • சான்றிதழ் பெற்ற விதைகளை 1 கிலோ சமையல் உப்புடன் 10 லிட்டர் நீரில் கரைத்து ஏற்படும் கரைசலில் ஊறவைக்க வேண்டும்.
  • அப்போது கரைசலில் மிதக்கும் விதைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
  • பின்னர் நல்ல நீரில் விதைகளை கழுவ வேண்டும்.
  • ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் விதைப்பதற்கு முன்பு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற உயிர் பூசனக் கொல்லி கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
  • விதைகளை 24 மணி நேரம் ஊற வைத்து பின்பு இருட்டு அறையில் 24 மணி நேரம் வைத்து முளைக்கட்ட வைக்க வேண்டும்.
  • முளை கட்டிய விதைகளை விதைப்பதற்கு முன் ஒரு பாக்கட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீயா உயிர் உரங்களுடன் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
  • இவ்வாறு செய்தால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் பெருமளவு குறைவதுடன் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து தாவரங்களுக்கு ஒருங்கே கிடைக்க வழி செய்கிறது.

இவ்வாறு கருங்குளம் வேளாண் அலுவலர் அஜ்மல்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

நன்றி: தினமலர்

Related Posts

குறுவை சாகுபடியில் உர மேலாண்மை... குறுவை சாகுபடியில் உர மேலாண்மையை கடைப்பிடித்து அதி...
காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி... ஆடிப்பட்ட காய்கறி விதைப்புக்கு முன் விதை நேர்த்தி ...
நெல்லுக்கு மேல் உரமாக இயற்கை உரங்கள... இரண்டுமுறைகளில் மேல் உரமாக ஒரு ஏக்கர் நிலத்துக்...
பிசான பருவ நெல் விதை நேர்த்தி மானூர் வட்டார பிசான பருவ நெல் சாகுபடியாளர்கள் மற்ற...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *