சம்பா பயிரில் இலைகருகல் நோய்

வேதாரண்யம் வட்டாரத்தில் சம்பா பயிரில் ஏற்பட்டுள்ள இலைகருகல் நோயை சரிசெய்ய, வேதாரண்யம் வட்டார விவசாய உதவி இயக்குனர் மணிகண்டன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

  • மாறுப்பட்ட தட்பவெப்ப நிலை காரணமாகவும், மழைக்காற்றின் சீற்றத்தாலும், வேதாரண்யம் வட்டாரத்தில், நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய் ஏற்பட்டுள்ளது.
  • சம்பா நெற்பயிரின் இலைகளில் இருஓரங்களிலும் மஞ்சள் கலந்த பழுப்பு நிற திட்டுக்கள் தோன்றி, கருகியதைபோன்ற தோற்றத்துடன் காணப்படும்.
  • இதைக்கட்டுப்படுத்த விதைநேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
  • தழைச்சத்து உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில், ஏக்கருக்கு 110 கிலோ வீதம் இடவேண்டும்.
  • நோய் எதிர்ப்பு தன்மையுள்ள நெல் ரகங்களான, ஐ.ஆர்.,- 20, பி.கே.எம்.,- 6 போன்ற ரகங்களை சாகுபடி செய்யலாம்.
  • சூடோமோனஸ் புளூராசன்ஸ் என்ற பாக்டீரியா உயிர்க்கொல்லி மருந்தினை ஏக்கருக்கு ஒரு கிலோ வீதம் நன்கு மக்கிய தொழுஉரம் 20 கிலோ அல்லது ஆற்றுமணல் 20 கிலோவுடன் சேர்த்து தூவவேண்டும்.
  • இலைவழி தெளிப்பாக சூடோமோனஸ் பாக்டீரியா உயிர்க்கொல்லி மருந்தினை ஏக்கருக்கு 400 கிராம் அளவில் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.
  • இலைவழி தெளிப்பாக காப்பர் ஆக்ஸிக் குளோரைடு 500 கிராமுடன், 120 கிராம் புரோ இஸ்ட்ரேப்டோசைக்கிளின் கலந்து ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசலை கை தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.

நன்றி: தினமலர்

Related Posts

பருவநிலை மாற்றத்தால் நெல்பயிரைத் தாக்கும் நோய்கள்... பருவநிலை மாற்றத்தால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள...
நெற்பயிரில் பாக்டீரியா இலைக்கருகல் நோய்... நெற்பயிரில் அறிகுறிகள் நோய்க்காரணியான பாக்டீரி...
நெல் பயிரில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறை... சம்பா பட்டத்தில் சாவித்திரி, ஆடுதுறை 38, ஆடுதுறை 3...
இயற்கை முறை நெல் நாற்றங்கால் பராமரிப்பு... சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் நெல் நாற்றங்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *