நெல் அறுவடைக்குப் பிந்தைய செய்நேர்த்தி தொழில்நுட்பங்கள்

நெல் அறுவடை வரையில் மட்டுமல்லாது, அறுவடைக்குப் பின்னரும் தொழில்நுட்ப முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் உற்பத்தியைப் பாதுகாத்து, நல்ல விலைக்கு விற்பனை செய்யலாம் என வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.

  •  நெல்லுக்கு கூடுதல் விலை கிடைப்பது அதில் உள்ள முழு அரிசியின் அடிப்படையில்தான் உள்ளது.
  • நெல் மணிகள் அளவையில் 62 சதவீதம் முழு அரிசி கிடைத்திட, அறுவடைக்குப் பின்னர் செய் நேர்த்தி தொழில்நுட்ப முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமானது.
  • நெல் ரகங்களுக்கு ஏற்ற வகையில் பயிரின் அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும்.
  • நெல் கதிரின் மணிகள் 80 சதவீதம் மஞ்சள் நிறமாக மாறி இருந்தால் அறுவடையை மேற்கொள்ளலாம். இதன் மூலம் மணிகள் உதிர்வதைத் தவிர்க்கலாம்.
  • அறுவடையின்போது 19 முதல் 23 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும்.
  • முதிர்ந்த நெல் மணிகளின் அரிசி கடுமையானதாகவும், உறுதியாகவும் இருக்கும். அறுவடை செய்த நெல்லை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
  • அதிக சூரிய வெப்பத்தில் நெல்லை காய வைக்கக் கூடாது.
  • காயவைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும்.
  • அதிக ஈரப்பதமுள்ள நெல் மணிகளைச் சேமித்து வைத்தால் பூஞ்சாண வித்துகள் பரவி நெல்லின் தரம் பாதிக்கப்படும்.
  • நல்லை சுத்தமான கோணிப்பைகளில் நிரப்பி, தரையின் மீது மரச்சட்டங்கள் அல்லது காய்ந்த வைக்கோல் பரப்பி அதன் மேல் மூட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும்.
  • மூட்டைகளை சுவரிலிருந்து ஓர் அடி இடைவெளி விட்டு அடுக்கி வைத்தால் ஈரப்பதம் வராது.
  • சேமித்து வைத்துள்ள நெல்லில் அத்துப்பூச்சி தாக்காமலிருக்க மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 10 மில்லி மருந்து அளவில் கலந்து தரைப்பகுதி, மூட்டைகள் மீது தெளிக்க வேண்டும்.
  • விற்பனைக்கு நெல்லைக் கொண்டு வரும்போது ரகங்கள் வாரியாகக் கொண்டுவர வேண்டும்.
  • பூச்சிகள், பூஞ்சாணங்கள் தாக்கப்பட்ட நெல் மற்றும் ஈரப்பதத்தால் கெட்டுப்போன நெல்லை தனியாகப் பிரித்து விட வேண்டும்.
  • ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும், கிராமங்களிலும் வேளாண் அலுவலரால் நெல் மணிகள் 4 தரங்களாகப் பிரிக்கப்படும். இங்கு ஈரப்பதம் மற்றும் தரங்களை இலவசமாக அறிந்து கொள்ளலாம்.

நன்றி: தினமணி

Related Posts

நெற்பயிரில் செந்தாளை நோய் பாதுகாப்பு... காளையார்கோவில் ஒன்றியத்தில் நெற்பயிரில்  செந்தாளை,...
ஒரு ஏக்கரில் 6,130 கிலோ நெல் விளைச்சல் சாதனை!... 'இயற்கை விவசாயம் மூலம் தான், நம் முன்னோர், அதிகளவி...
இயற்கை விவசாய முறை நெல் சாகுபடி... இயற்கை விவசாய முறையில் நெல் சாகுபடி செய்வதன்...
திருந்திய நெல் சாகுபடி குறித்த பயிற்சி... தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் வருகிற...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *