நெல் பயிரில் இலை சுருட்டு நோய் காப்பது எப்படி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சாகுபடி செய்துள்ள நெல் பயிரில், இலை சுருட்டு புழு தாக்குதல் அதிகம் உள்ளதால், நெல் சாகுபடி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அறிகுறிகள்
  • நோய் தாக்கிய இலைகளின் இரு பகுதிகளையும் சுருட்டி மெல்லிய நூலிழையினால் பிணைத்துகொள்ளும்.
  • புழு இலையினுள்ளே இருந்து பச்சையத்தை சுரண்டி திண்ணும்.
  • நோய் தாக்கப்பட்ட பயிர்கள், வெண்மை நிறமாக மாறி பயிற் வளர்ச்சி குன்றி காணப்படுகிறது. இலை சுருட்டு புழுக்களின் தாக்குதல் அதிகமாகும் போது கதிர்கள் வளராது.

நோய் தாக்குதல் மற்றும் கட்டுப்பாடு முறைகள் குறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நாச்சியப்பன் கூறியது:

  • நெல் நடவின்போது, நாற்றுகளை போதிய இடைவெளி விட்டு நடாமல் நெருக்கமாக நடுவதும், நெற்பயிருக்கு தேவையான தழைச்சத்தினை சிபாரிசுபடி பாதி அடியுரமாகவும், மீதி பாதியினை பிரித்து நட்ட 21வது நாள், கதிர் உருவாகும் பருவம் மற்றும் பூப்பூக்கும் பருவம் ஆகிய மூன்று நிலைகளில் பிரித்து போடுவதற்கு பதிலாக தேவைக்கு அதிகமாக இடுவதும், வானம் மப்பும் மமந்தாரமுமாக இருப்பதும் இலை சுருட்டு புழுவின் தாக்குதலுக்கு முக்கிய காரணம்.
  • இலை சுருட்டு புழுவை உழவியல் முறைகள், கைவினை முறைகள், உயிரியல் முறைகள் மற்றும் ரசாயன முறைகள் என ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையில் கையாண்டு கட்டுப்படுத்ததாலாம்.
  • உழவியல் முறையில் தழைசத்து உரத்தை பரிந்துரை செய்யும் அளவுக்கு மேல் இடுவதை தவிர்த்து, மூன்று நிலைகளில் பிரித்து இடவேண்டும்.
  • கைவினை முறைபடி அந்துப்பூச்சிகளை கவர்ந்திட வயலில் விளக்குப்பொறிகளை வைத்து கவர்ந்து அழிக்கலாம்.
  • வரப்புகளில் உள்ள புல் மற்றும் களை செடிகளில் இந்த பூச்சிகள் முட்டைகள் இட்டு இனப்பெருக்கம் செய்து பயிர்களை மேலும் சேதப்படுத்துவதால் வரப்புகளை சுத்தமாக வைக்க வேண்டும்.
  • உயிரியல் முறையில் இலை சுருட்டு புழு முட்டைகளை அழிக்க முட்டை ஒட்டுண்ணியான ட்ரைக்கோ கிராம்மா கைலோனிஸ்யினை ஏக்கருக்கு, 2 சிசி வீதம் நடந்து செய்த, 44 மற்றும் 51ம் நாளில் வயலில் இட்டு கட்டுப்படுத்ததலாம்.
  • 5 சத வேப்பங்கொட்டை கரைசல் அதாவது, 10 கிலோ வேப்பங்கொட்டையை நன்கு தூளாக்கி, 20 லிட்டர் நீரில் ஒரு நாள் ஊறவைத்து பிறகு வடிகட்டி, 200 லிட்டர் நீர் சேத்துஒட்டும் திரவம் ,200 மில்லி சேர்த்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
  • ரசாயன பயிர்பாதுகாப்பு மருந்துகளான கார்பரில் 50 சதம் ஏக்கருக்கு, 400 கிராம் அல்லது குளார்பைரிபாஸ் 20 சிசி ஏக்கருக்கு, 500 மி.லி., தெளிப்பானுக்கு தக்கவாறு தண்ணீர் கலந்து மாலை வேலையில் தெளித்து கட்டுப்படுத்தலாம்.

இலை சுருட்டு புழுக்களின் தாக்குதலுக்கு உள்ளான வயல்களில் விவசாயிகள் தவறாது ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என்று அவர் கூறினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *