பச்சையம் இல்லாத சம்பா நெல்

பச்சை நிறமே இல்லாமல் (No Chrolophyll) வளரக்கூடிய ‘கருவாச்சி’ என்ற புதிய ரக சம்பா நெல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. வறட்சியை தாங்கி விளையக்கூடியதால் அதிக மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar
  • ராமநாதபுரம் உத்தரகோசமங்கை, எக்ககுடி, கடம்பங்குடி, புக்குளம், மல்லாங்குடி, பனைக்குளம் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் ‘கருவாச்சி’ என்ற புதிய சம்பா ரக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
  • வறட்சி காலத்திலும் நல்ல மகசூலை தரும் இந்த ரக நெல்லுக்கு விவசாயிகளிடையே நல்ல வரவேற்பு உள்ளது.
  • இந்த நெற்பயிரில், நாற்றுகளில் பச்சை நிறமே இல்லை.
  • டீத்தூள் நிறத்தில் காணப்படும் நாற்றுகள் பார்ப்பதற்கு காய்ந்தநிலையில் இருப்பதால் இதை ‘கருவாச்சி’ ரகம் என விவசாயிகள் செல்லமாக அழைக்கின்றனர்.
  • ஏக்கருக்கு ஒன்றரை டன் மகசூல் தரக்கூடிய இந்த நெற்பயிர், குறைந்தளவு தண்ணீர் இருந்தாலும் மளமளவென வளரும் தன்மை கொண்டது.
  • இதனால், பெரும்பாலான விவசாயிகள் ஆடுதுறை 45 ரக நெல்லுக்கு பிறகு, இந்த புதிய ரக நெல்லை அதிகளவு சாகுபடி செய்துள்ளனர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *