பருவநிலை மாற்றத்தால் நெல்பயிரைத் தாக்கும் நோய்கள்

பருவநிலை மாற்றத்தால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. வளி மண்டலத்தில் மாசு நிறைந்துள்ளது. இதனால் மழைக் காலத்திலும் குளிர்காலத்திலும் நெற் பயிரைத் தாக்கும் நோய்கள் இப்போது கோடைக்காலத்திலும் தாக்குகின்றன.

இப்போது பரவலாக சொர்ணாவாரி நெல் பட்டத்தில் ஆடுதுறை 37, டிகேஎம் 9 ஆகிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இப் பயிர்களைத் தாக்கும் நோய்கள் குறித்தும் அதைத் தடுக்கும் முறைகள் குறித்தும் புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை நிபுணர் என். விஜயகுமார் கூறியது:

  • மார்கழி, தை மாதங்களில் குளிர் அதிகமாக இருக்கும்போது நோய் அதிகம் வரும். இந்த ஆண்டு வெப்பநிலை அதிகமாக இருக்கும்போதும் சொர்ணாவாரி பட்ட நெல் சாகுபடியில் நோய் தாக்குதல் இருக்கிறது.
  • கண்ணுக்குப் புலப்படாத நுண் கிருமியான ஒருவிதமான பாக்டீரியாவால் இப்போது நோய்கள் உருவாகி வருகின்றன.
  • பொதுவாக இந்த பாக்டீரியா கிருமிகள் உஷ்ணம் அதிகமாக இருக்கும்போது அழிந்து விடும். ஆனால் இந்த ஆண்டு உஷ்ணம் அதிகமாக இருந்தாலும் காற்றில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாக இருப்பதாலும் வளி மண்டலத்தில் மாசுகள் அதிகமாக சூழ்ந்திருப்பதாலும் இத்தகைய நோய்கள் பயிரைத் தாக்கியுள்ளன.இதனால் மகசூல் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது.

குலை நோய்:

பொதுவாக இந்த நோய் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஐ.ஆர். 50 நெல் ரகங்களில் அதிகமாக வரும்.ஆனால் இப்போது வயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஆடுதுறை 37 ரகத்தில் இதன் தாக்குதல் தென்படுகிறது.

குலை நோய் வருவதற்கான காரணம்:

  • காற்றில் அதிகமான ஈரப்பதம் மற்றும் மண்ணில் உள்ள பயிர்களின் வேர்களால் சரியாக சுவாகிக்க முடியாமல் இருப்பதால் இந்த நோய் வருகிறது.
  • இதைக் கட்டுப்படுத்த வயல், வரப்புகளில் உள்ள களைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
  • தழைச்சத்து உரம் அதிகமாக இடக்கூடாது.
  • அப்படி தழைச்சத்து உரம் அதிகமாகப் போடுவதாக இருந்தால அதை 3 பிரிவாகப் பிரித்து இட வேண்டும். அதாவது 50 சதவீதம் பயிர் நடவு செய்யும் போதும் 25 சதவீதம் தூர் கட்டும் போதும், மற்றொரு 25 சதவீதம் தண்டு உருளும்போதும் இட வேண்டும்.
  • தாக்குதல் அதிகமாகத் தென்பட்டால் 0.2 சதவீதம் சூடோமோனாஸ் புளோரன்ஸ் என்ற உயிரி ரக மருந்தை 1 கிலோ எடுத்து 500 லிட்டர் நீரில் கரைத்து நடவு நட்ட 45-வது நாளில் இருந்து 10 நாள் இடைவெளியில் 3 முறை பயிரின் மீது தெளிக்க வேண்டும்.
  • தாக்குதல் மிகவும் அதிகமாக இருந்தால் கார்பன்டசீல் 1 ஹெக்டேருக்கு 250 கிராம் அல்லது டிரைசெக்லோúஸôல் 250 கிராம் தெளிக்க வேண்டும்.

பாக்டீரியல் இலை கருகல் நோய்:

  • இந்த நோய் இப்போது ஆடுதுறை 37 நெல் ரகத்தில் அதிகம் தென்படுகிறது.
  • இது முக்கியமாக கோடைப்பருவத்தில் பய்டோபிளாஸ்மா, ஆர்என்ஏ வைரஸ் மூலம் வருகிறது.

நிர்வகிக்கும் முறைகள்:

  • ஒரு வயலில் இருந்து மற்றொரு வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சக் கூடாது.
  • 20 கிலோ பசும் சாணத்தை 100 லிட்டர் நீரில் 12 மணி நேரம் ஊற வைத்து அதன் நீரை இலைகள் மீது தெளிப்பதால் இதைக் கட்டுப்படுத்தலாம்.
  • பிளிச்சிங் பவுடர் 100 மைக்ரோ கிராம் 1 மி.லி. தண்ணீரில் கரைத்து பயிரில் தெளிக்க வேண்டும்.
  • தாக்குதல் அதிகமாகத் தென்பட்டால் காப்பர் ஹைட்ராக்ûஸடு 2000 ஒரு லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் என்ற அளவில் கரைத்துத் தெளிக்க வேண்டும்.

இலைக் கருகல் நோய்:

  • நெல்லில் தண்ணீர் அதிகமாகக் கட்டும்போது இலை கருகிவிடுகிறது.
  • இதைச் சரி செய்ய தழைச் சத்து அதிகம் இடுவதைத் தவிர்த்து சாம்பல் சத்து அதிகம் இட வேண்டும்.
  • 2 சதவீதம் கால்சியம் சல்பேட் அல்லது 0.2 சதவீதம் சூடோமோனாஸ் புளோரஸல் என்ற உயிரி ரக மருந்தை இலையின் மீது தெளிக்க வேண்டும்.
  • அதிமாகத் தென்பட்டால் கார்பன்டஸீம் 1 லிட்டர் நீருக்கு 1 கிராம் அல்லது கான்டாப் 1 லிட்டர் 2 மி.மீ. அல்லது டெனோமைல் 1 லிட்டர் நீருக்கு 2 மி.லி. பாலிஆக்ஸின் 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் அல்லது காப்பர் ஹைட்ரைக்சைடு101 ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் எதாவது ஒன்றை கரைத்துத் தெளிக்க வேண்டும்.

இலை உறை அழுகல்நோய்:

  • டிகேஎம் 9, என்ற நெல் ரகத்தில் பரவலாகத் தென்படுகிறது.
  • இதைக் கட்டுப்படுத்த வடிகால் வசதி அவசியம்.
  • நெல் பயிரில் தேங்கியுள்ள நீரை வடிகட்ட வேண்டும்.
  • தாக்குதல் அதிகமாகத் தென்பட்டால் காப்பர்ஹைராக்சைடு 101 ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம், அல்லது பென்டின் ஹைட்ராக்ûஸடு 1 லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கரைத்து இலை உறை மீது தெளிக்க வேண்டும்.
  • தாக்குதல் மிகவும் தென்பட்டால் புராபிகோனாúஸôல் 1 லிட்டர் நீருக்கு 1 கிராம் என்ற அளவில் எடுத்து தண்டுப் பகுதியில் சுற்றியுள்ள இலை உறை மீது தெளித்து நோயின் தாக்குதலைக் குறைக்கலாம்.

இது போன்ற ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகளால் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *