புதிய நெல் ரகம் "திருப்பதி சாரம் 5"

  • தமிழகத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த நெல் இரகம் கார் பிந்தய பாசனப் பருவங்களில் பயிரிட ஏற்றது.
  • இந்த இரகம் ஒரு எக்டருக்கு சராசரியாக 6300 கிலோ விளைச்சலைத் தருகிறது.
  • ஏற்கனவே வெளியிடப்பட்டு பயன்பாட்டில் உள்ள அம்பை 16 இரகத்தை விட 14 விழுக்காடு அதிக விளைச்சலைத் தரும்.
  • விதைத்த 118 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் இந்த இரகம் தண்டு துளைப்பான், இலை சுருட்டுப்புழு புகையான் ஆகிய பூச்சிகளுக்கு மிதமாக எதிர்ப்புத்திறன் கொண்டது.
  • இந்த இரகத்தின் அரிசி குறுகிய வடிவில் தடிமனானது.
  • அமைலோஸ் அரிசியில் இடைப்பட்ட நிலையில் உள்ளதால் சமைக்க உகந்தது.
  • மேலும் நல்ல அறவைத்திறன் கொண்டது.
  • நாமக்கல் மாவட்டத்தில் சோதனை முறையில் பயிரிடப்பட்ட போது 11,567 கிலோ விளைச்சலைத் தந்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு முகவரி: இயக்குநர், பயிர்பெருக்க மரபியல் மையம், த.வே.பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-641 003. போன்: 0422661 1215.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *