வறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற ஆலோசனை

நாகை மாவட்டத்தில் தற்போது வறட்சியில் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அனுராதா தொழில்நுட்ப ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாகை மாவட்டத்தில் தற்போது நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிர்கள் போதிய தண்ணீர், மழை இன்றி பயிர் கருகும் தருவாயில் உள்ளது. பாதிப்பிற்கு உள்ளாகும்.

நெற்பயிரை 7 முதல் 10 நாட்கள் வரை ஆரம்ப கட்ட வறட்சியிலிருந்து காப்பாற்ற, பி.பி.எப்.எம். என்ற மெத்தைலோட்ரோபிக் பாக்டீயா கரைசலை ஒரு ஏக்கருக்கு 200 மில்லி வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.      எனவே, இந்த பாக்டீயா கரைசல் தேவைப்படும் விவசாயிகள், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் மூலம் பெறப்பட்டு ஒரு லிட்டர் ரூ.300க்கு விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேவைப்படும் விவசாயிகள் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தை நேரடியாகவோ அல்லது 04365246266 என்ற தொலைபேசி எண்ணையோ தொடர்பு கொண்டு ஆர்டரை பதிவு செய்து கொள்ளலாம்.

மெத்தைலோட்ரோபிக் பாக்டீயா கரைசலை தெளிப்பதால், பயிர்களுக்கு பயிர் வளர்ச்சி ஊக்கிகளான சைட்டோகைனின், ஆக்சிஜன்களை அளிக்கிறது. வறட்சியை தாங்கும் திறனை பயிர்களுக்கு அளிக்கிறது.

இதனால் விதை முளைப்புத்திறன், நாற்றுகளின் வளர்ச்சி அதிகரிக்கும். பூக்கும் காலம், காய்களின் அறுவடை காலத்தை குறைக்கிறது. மேலும் தானியம், விதைகளின் நிறம் மற்றும் தரம் அதிகரிக்கும். மகசூல் 10 சதவீதம் வரை அதிகரிக்கும்.

பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பயிர்கள், மரங்கள், பூச்செடிகளில், பரிந்துரைக்கப்பட்ட விதை அளவை 50 மிலி மெத்தைலோட்ரோபிக் பாக்டீயா கரைசலில் நன்கு கலந்து 5 முதல் 10 நிமிடம் வரை நிழலில் உலர்த்தி பின்னர் விதைக்க வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் திரவ நுண்ணுயிரை தண்ணீரில் கலந்து இலைகள் நன்றாக நனையும்படி தெளிக்க வேண்டும்.

பயிர்களின் முக்கிய வளர்ச்சி காலங்களான நாற்று பருவம், தூர் பிடிக்கும் பருவம், பஞ்சு கட்டும் பருவம், பூக்கும் பருவத்தில் தெளிக்க வேண்டும். மீண்டும் 15 நாட்கள் கழித்து ஒரு முறை தெளிக்க வேண்டும் என சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் அனுராதா தெரிவித்துள்ளார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *