வறட்சியை தாங்கி வளரும் நெல்

மானாவாரி நிலங்களில் வறட்சியை தாங்கி வளரும், ‘அண்ணா-4’ என்ற புதிய ரக நெல்லில் நல்ல மகசூல் கிடைப்பதால், கோவை விவசாயிகள் பயிரிட அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோவை வேளாண் பல்கலையும், பரமக்குடி வேளாண் ஆராய்ச்சி மையமும் இணைந்து 2009ம் ஆண்டு, ‘அண்ணா-4’ என்ற புதிய மானாவாரி ரக நெல் அறிமுகம் செய்தது. வேளாண் பல்கலை வேளாண் – உயிரியல் தொழில்நுட்ப துறை இயக்குனர் சந்திரபாபு கூறியதாவது:

  • ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மானாவாரி நெல், ஒரு லட்சம் எக்டரில் பயிர் செய்யப்படுகிறது.
  • பெரும்பாலும் நாட்டு நெல் மற்றும் ஆடுதுறை நெல் ரகங்களே சாகுபடி செய்யப்பட்டு வந்தன.
  • இவை குறைந்த விளைச்சலையும், சாய்ந்து வளரும் தன்மையும் உடைய நெல் ரகங்கள். மழை குறைவாக உள்ள காலங்களில், குறைந்த விளைச்சலை மட்டுமே பெறமுடியும்.
  • இப்பிரச்னைக்கு தீர்வு காண, அண்ணா-4 என்ற புதிய ரக நெல் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்த நெல் வறட்சியை தாங்கி வ ளர்வதோடு, நேரடி விதைப்புக்கும் ஏற்றது.
  • 105 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடும்.
  • அண்ணா-4 ரகம் 66 சதவீதம் அறவைத்தி றனும், நீண்ட சன்னமான அரிசியையும் கொண்டது.
  • எக்டருக்கு நான்கு முதல் ஐந்து டன் வரை மகசூல் கிடைக்கும்.
  • வறட்சி அதிகம் உள்ள மாவட்டங்களில், இந்நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைத்துள்ளது.
  • தற்போது வறட்சி அதிகரித்து இருப்பதால் அண்ணா -4 நெல் ரகத்தை பயிரிட விவசாயிகள் விரும்புகின்றனர். இவ்வாறு, சந்திரபாபு கூறினார்.
  • மேலும், விபரங்களுக்கு 04226611262 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *