பப்பாளியில் மாவுப்பூச்சி கட்டுப்படுத்த வழிகள்

பாப்பாளியில் மாவுப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, வேம்பு மருந்து தெளித்து பயன்பெறலாம்’ என, ராசிபுரம் வெண்ணந்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

  • வெண்ணந்தூர் வட்டாரத்தில், தற்போது பப்பாளி மாவுப்பூச்சியின் தாக்குதல் தொடங்கியுள்ளது.
  • விவசாயிகள், பொருளாதார சேதாரத்திற்கு முன், இப்பூச்சியைக் கட்டுப்படுத்த, அசாடிராக்டின், மூன்று சதவீதம் (வேம்பு மருந்து) மருந்தை, 25 மி.லி., ஒரு வாளி நீரில் கலந்து, காலை அல்லது மாலையில், இலை, தழை, தண்டுப் பகுதிகள் நன்கு நனையும்படி தெளிக்கலாம்.
  • இவ்வேம்பு மருந்து, வெண்ணந்தூர் வேளாண் விரிவாக்க மையம் மற்றும் அத்தனூர் துணை வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி மானியத்துடன் அசாடிராக்டின் பெற்று, விவசாயிகள் பயன் பெறலாம்.
  • தற்போதைய சூழ்நிலையில், பப்பாளி மாவுப்பூச்சியின் தாக்கம் தென்படுகிறது.
  • மேலும், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது, பூச்சியின் எண்ணிக்கை அதிகரித்து, பயிரினை பாதிக்கும். எனவே, தற்போதே அசாடிராக்டின், மூன்று சதவீதம் தெளித்து பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *