பப்பாளி மரத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.50,000!

இயற்கை முறையில் பப்பாளி பயிரிட்டு, ஒரு மரத்தில், ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் லாபம் பார்த்து வரும், நெல்லை மாவட்டம், மேலகரம் பகுதியைச் சேர்ந்தவிவசாயி பி.கே.மாரிமுத்து கூறுகிறார் –

Courtesy: Dinamalar
Courtesy: Dinamalar

 

 

 

 

 

 

 

 

  • பப்பாளியை ஆண்டு முழுவதும் பயிரிடலாம். பப்பாளியில், ஆண், பெண் என, இரு வகை உண்டு. இரு பாலினமும் கலந்த ரகங்களும் உண்டு.
  • கோ-3, கோ-7 போன்ற ரகங்கள், ஆண் பூ மற்றும் பெண் பூவை ஒரே மரத்தில் கொண்டிருக்கும்.
  • ‘பப்பைன்’ எனப்படும் பப்பாளிப் பால் எடுப்பதற்கு, கோ – 2, கோ -5 மற்றும் கோ – 6 ரகங்கள் ஏற்றவை.
  • பொதுவாக, தமிழகத்தில், ரெட் லேடி, ஜிண்டா பப்பாளி ரகங்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
  • ஏக்கருக்கு, 700 பப்பாளிச் செடிகள் வரை நடவு செய்ய முடியும். நிலத்தை உழுது, 6 அடி இடைவெளியில், 45 செ.மீ., நீளம், அகலம் ஆழத்தில் குழிகள் எடுக்க வேண்டும். குழிகளில், மண் மற்றும் தொழுவுரம் நிரப்பி, நாற்றுகளை நட வேண்டும்.
  • செடிகள் பூக்கத் துவங்கியதும், 15 அல்லது 20 ௦ செடிகளுக்கு ஒன்று வீதம், ஆண் செடிகளை விட்டு வைத்து, மற்றவற்றையும்; கோ – 3, கோ – 7 ரகங்களில், இருபால் பூக்கள் கொண்டவற்றை மட்டும் விட்டுவிட்டு, பெண் மரங்களையும் நீக்கிவிட வேண்டும்.
  • மூன்று நாட்களுக்கு ஒருமுறை நீர்பாய்ச்சி, செடிகளைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • நடவு செய்த ஆறாம் மாதம், பப்பாளி பூக்கும் தருணத்தில் தான், மாவுப்பூச்சி தாக்குதல் அதிகம் இருக்கும். வேப்பங்கொட்டை கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம். சேதம் அதிகமாயிருப்பின், ரசாயன பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கலாம்.
  • தலா ௫௦ கிராம் வேப்பம் புண்ணாக்கை, செடிக்குச் செடி வேரில் வைத்தால், வேர் சம்பந்தமான நோய்கள் அண்டாது.ஏழு மாதம் வரை, பெரிதாக பராமரிப்பு தேவையில்லை. எட்டாம் மாதம் காய் அறுவடைக்கு வந்துவிடும்.
  • ஆண்டுக்கு ஒரு முறை வேப்பம் புண்ணாக்கு, ஆடு மற்றும் மாட்டுச் சாணம் இட வேண்டும்.
  • பழங்களின் தோல், சற்றே மஞ்சள் நிறமாக வரும்போது, அறுவடை செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு காய்ப்பு கிடைக்கும். மகசூல் முடிந்ததும், மரங்களை வெட்டி, ‘ரோட்டா வேட்டர்’ வைத்து உழுது, நிலத்திற்கே உரமாக்கலாம்.
  •  பப்பாளியை தனிப் பயிராக போட்டால், லட்சக்கணக்கில் லாபம் பெற முடியும். பப்பாளியின் மருத்துவப் பயன்கள் பற்றி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருவதால், விற்பனை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *