பயறு சாகுபடி : கூடுதல் விலை பெற யோசனை

பயறு சாகுபடியிலில் அறுவடைக்குப் பின் செய் நேர்த்தி முறைகளைக் கையாண்டால் பருப்பு தரமாக இருப்பதுடன் விவசாயிகள் கூடுதல் விலையும் பெற முடியும் என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.

  • உளுந்து, பாசிப்பயறு, துவரை, தட்டைப்பயறு ஆகிய பயறு வகைகளில் கூடுதல் வருவாய் என்பது பருப்பு சதவீதத்தைப் பொருத்தே அமையும்.
  • 85 சதவீத பருப்பு அளவும், கூடுதல் விலையும் கிடைக்க அறுவடைக்குப் பின் செய் நேர்த்தி முறைகளை விவசாயிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
  • பயறு வகை காய்கள் நெற்றுகளாக மாறியும், இலைகள் பழுத்து உதிர ஆரம்பிக்கும்போது அறுவடை செய்ய வேண்டும்.
  • நெற்றுகள் காபி கொட்டை நிறமாகியிருந்தால் அவற்றை தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.
  • செடியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட நெற்றுகளை காயவைத்து விதைகளைப் பிரித்து எடுத்து சுத்தம் செய்ய வேண்டும்.
  • பிரித்து எடுத்த விதைகளில் கலந்துள்ள கல், மண், தூசி மற்றும் சருகுகள், முதிராத விதைகள், பூச்சி நோய் தாக்கியவை, உடைந்த விதைகள் ஆகியவற்றை தனியாக நீக்க வேண்டும்.
  • விதைகளில் ஈரப்பதம் 9 சதவீதத்க்குள் இருக்கும் வகையில் நன்கு காய வைக்க வேண்டும்.
  • உணவுக்காக நீண்ட நாள் சேமிக்க வேண்டுமெனில், விதைகளை வெய்யிலில் காய வைத்து பின்னர் ஒரு கிலோ விதைக்கு 5 மில்லி என்ற அளவில் நல்லெண்ணெய் தடவி நிழலில் உலரவிட்டு சேமிக்கலாம்.
  • துவரை விதைக்கு செம்மண் தடவி காய வைத்து சேமிக்கலாம்.
  • பயறு வகைகள் ஸ்பெஷல், நல்லது, சுமார், சாதாரணம் என 4 தரங்களாக பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு தரத்துக்கும் ஒரு விலை என்பதால் அறுவடைக்குப் பின் செய் நேர்த்தி முறைகளைக் கையாண்டு ஒவ்வொரு தரத்துக்கும் ஒரு விலை பெறலாம்.இல்லையெனில், அனைத்துக்கும் சேர்த்து குறிப்பிட்ட விலையை மட்டுமே பெற முடியும்.
  • தனித்தனியாக எடைக்குத் தகுந்த விலை பெறுவதே கூடுதல் வருவாய்க்கு வழியாக அமையும்.

எனவே, விவசாயிகள் தவறாமல் பின்செய்தி நேர்த்தி முறைகளை கையாண்டு கூடுதல் விலை பெறலாம் என்று தருமபுரி மாவட்ட வேளாண்மைத் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) இ. செல்வம் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “பயறு சாகுபடி : கூடுதல் விலை பெற யோசனை

Leave a Reply to sathya sivanantha moorthy Cancel reply

Your email address will not be published. Required fields are marked *