இலவச வேளாண் வணிக பயிற்சி

மத்திய அரசின் நிதி உதவியுடன் இலவசமாக வழங்கப்படவுள்ள வேளாண் வணிக பயிற்சிக்கு வேளாண் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் வேளாண் அமைச்சகத்துடன் இணைந்து இப்பயிற்சியை அளிக்கும் மதுரை வாப்ஸ் பயிற்சி மையத்தின் தொடர்பு அலுவலர் எஸ்எ.அருள் தெரிவித்தது: படித்த வேலைவாய்பற்ற வேளாண்மை, கால்நடை, வேளாண் பொறியியல், தோட்டக்கலை, வனஇயல் மற்றும் மனைஇயல் பட்டாதாரிகள் சொந்தமாக வேளாண் மருத்துவ மையம் மற்றும் வேளாண் விற்பனை தொழில் மையங்களை அமைத்துக்கொள்ளும் வகையில் இரண்டு மாதங்களுக்கு இந்த பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது.

மதுரையில் வாப்ஸ் பயிற்சி மையத்தில் இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

பயிற்சி காலத்தில் தங்குமிடம், உணவு இலவசமாக வழங்கப்படுவதோடு, தொழில், நிர்வாகம், திட்டமிடுதல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி, தொழில்நுட்ப பயிற்சி மையங்களை பார்வையிடுதல், வங்கி கடனுக்கான திட்ட அறிக்கை தயாரிப்பது உள்ளிட்ட உதவிகளும் அளிக்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் வேளாண் மருத்துவ மையங்கள் மற்றும் விற்பனை தொழில் மையங்கள் தொடங்கிட பிணையுடன் ரூ.10 லட்சம் வரையிலும், பிணையில்லாமல் ரூ.5 லட்சம் வரை வங்கி பெற வாய்ப்புள்ளது.

இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 09894246874 மற்றும் 09952873132 என்ற செல்போன் எண்களில் தொடர்புகொண்டு பயிற்சி நடைபெறும் இடம், தேதி, விóண்ணப்பபடிவம் கிடைக்கும் இடம் உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம்

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “இலவச வேளாண் வணிக பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *