கறவை மாடு வளர்ப்பு பயிற்சி

 “கறவை மாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, நோய்தடுப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடக்கிறது’ என, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:

நாமக்கல்-மோகனூர் சாலையில், கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், வேளாண் அறிவியல் நிலையத்தில், பண்ணையாளர் மற்றும் விவசாயிகளுக்கு கறவைமாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, மலட்டுதன்மை, நோய் தடுப்பு, சினைப்பருவம், ஒரு ஆண்டுக்கு ஒரு கன்று பெறுதல் முறை குறித்த, ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, வரும், 2014 நவம்பர் 18ம் தேதி, காலை, 9 மணிக்கு நடக்கிறது.

விருப்பமுள்ளவர்கள், வரும், 2014 நவம்பர்  17ம் தேதிக்குள், 04286266 345 என்ற தொலைபேசி அல்லது நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *