வேளாண்மை பொருள்கள் பதனிடல் தொழில்நுட்பப் பயிற்சி

சென்னையில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் 2012 டிசம்பர் 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வேளாண்மை பொருள்கள் பதனிடல் தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

வேளாண்மை பொருள்களை உற்பத்திக்கு பிறகு முறையாக பதப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை துறையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தெரியாததால் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் கோடி வேளாண்மை உற்பத்தி பொருள்கள் விரயம் ஆகின்றன.

இந்தியா தானியம் மற்றும் பருப்பு உற்பத்தியில் முதலிடத்திலும், காய்கறி மற்றும் பழ உற்பத்தியில் இரண்டாம் இடத்திலும், எண்ணெய் வித்துப் பயிர்கள் உற்பத்தியில் ஐந்தாம் இடத்திலும் உள்ளது.

எனவே, அறுவடைக்குப் பின் தானியங்களை முறையாக பதப்படுத்துதல், எலிகள் கட்டுப்பாடு, நவீன சேமிப்பு முறைகள், பயிறு வகைகளை பதப்படுத்துதல், மதிப்பூட்டப்பட்ட தானியங்கள் மற்றும் பயிறு பொருள்கள் தயாரிப்பு, சோயா, பால் மற்றும் பன்னீர் தயாரிப்பு, காய்கறிகள் பதப்படுத்துதல், பழப் பொருள்கள் மற்றும் மசாலா வகைகள் தயாரிப்பு, விற்பனை வாய்ப்புகள், தரக்கட்டுப்பாடு போன்ற தலைப்புகளில் ஒரு மாத காலத்திற்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில் கலந்து கொள்ளபவர்களுக்கு மதிய உணவு, தங்கும் இடம், பயிற்சி புத்தகம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.

விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு முதல்வர், உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரி, கொடுவள்ளி, அலமாதி அஞ்சல், செங்குன்றம், சென்னை-52 என்ற முகவரி அல்லது 04427680214, 09444155312, 09444810657 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இப்பயிற்சிக்கான விண்ணப்பங்கள் 2012 நவம்பர் 15-ம் தேதி வரை பெறப்படும்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *