பருத்தி இரகம் எஸ்.வி.பி.ஆர்.4

  • கோடை இறவை நெல் தரிசு பகுதிகளுக்கு ஏற்ற உயர் விளைச்சல் இரகம்
  • தற்போது கோடை இறவைப் பட்டத்தில் எஸ்.வி.பி.ஆர்.2 ரகமும், நெல் தரிசு பருத்திப் பகுதிகளில் குறுகிய கால எம்.சி.யு.7, எஸ்.வி.பி.ஆர்.2, எஸ்.வி.வி.ஆர்.3 இரகங்கள் நல்ல மகசூல் கொடுத்தாலும் இந்த இரகங்களின் பஞ்சு தற்போதைய பெரும்பாலான மில் தேவையான 40 ஆம் நம்பர் நூல் நூற்க ஏற்றதாக இல்லை.
  • எனவே திருவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையம், எஸ்.வி.வி.ஆர்.4 என்னும் உயர்தர, நடுத்தர இழைநீளம் (27.8 மிமீ) கொண்ட உயர் விளைச்சல் பருத்தி இரகத்தை 2009 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
  • இந்த இரகம் நடப்பு சாகுபடியிலுள்ள எஸ்.வி.பி.ஆர்.2, எஸ்.வி.பி.ஆர்.3, எம்.சி.யு.7 இரகங்களை விட அதிக விளைச்சல் தருவதுடன் எக்டருக்கு 20 குவிண்டால் பருத்தி விளைச்சலை கொடுக்கிறது.
  • நடுத்தர வயதுடைய இந்த இரகம் 150 நாட்களில் விளையக் கூடியது.
  • மறுதழைவிற்கு ஏற்ற இரகமாக இருப்பதால் முதல் அறுவடை 150 நாட்களில் முடிந்தவுடன், காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் குறுவை நீர்வரத்து இல்லாத போதும், ஒரு போக சம்பா பாசனப்பகுதிகளிலும் மறுதழைவிற்கு விட்டு இரண்டாம் அறுவடையில் எக்டருக்கு 1000 கிலோ பருத்தி மகசூல் கிடைக்கிறது.
  • எம்.சி.யு.5 இரகத்துடன் ஒப்பிடும் நிலையில் இருப்பதால் நல்ல விலை கிடைக்கிறது. தகவல்: பருத்தி ஆராய்ச்சி நிலையம், திருவில்லிபுத்தூர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *