பருத்தி செடியின் தண்டுகள இருந்து மக்கிய உரம்

பருத்தி அறுவடை முடிந்ததும் அதன் தண்டுகள் விறகிற்காக எரிக்கப்படுகின்றன.

இந்த தண்டுகளுடன் இதர பயிர்களின் பண்ணைக்கழிவுகள் மற்றும் களைகள் போன்றவற்றை டிரைக்கோடெர்மா விரிடி போன்ற புஞ்சாணங்களைக் கொண்டு சிறப்பான முறையில்  மக்கச் செய்ய முடியும்.

இந்த தொழில்நுட்பம் சிஜிசிஆர் நாக்பூர் அறிமுகப்படுத்தியது. இதன் விவரம் பின்வருமாறு:

  • 10x2x1 மீட்டர் என்ற அளவில் குழியை தயார் செய்ய வேண்டும்.
  • இதில் 2 ஹெக்டர் அளவில் உள்ள காய்ந்த பருத்தி குச்சிகளை நான்கு அடுக்கலாக அடுக்க வேண்டும்.
  • இந்த தண்டுகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப லேசான பண்ணை கழிவுகளான சோள தட்டைகள், கொடிகள், சோயாபீன் போன்றவை கொண்டு நிரப்ப வேண்டும்.
  • பருத்தி செடியின் தண்டுகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நிரப்ப மற்றும் 50 கிலோ சாணமட (இது ஆரம்ப நிலையில் பூஞ்சாணங்கள் பெருக உதவி புரியும்)
  • ஒவ்வொரு அடுக்கிலும் 60 லிட்டர் தண்ணீரில் 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி தூள் மற்றும் அரைக் கிலோ வெல்லம் மற்றும் 15 கிராம் ஈஸ்ட் புவுடரை கலந்து தெளிக்க வேண்டும்.
  • இந்த குழியை சணப்பை செடியின் தண்டுகளான கொண்டு மூட வேண்டும்.இது நீர் ஆவியாவதை தடுக்க உதவும்.
  • குழியில் தேவையான ஈரப்பதம் நிலவ அடிக்கடி தண்ணீரை தெளிக்க வேண்டும். குழியில் உள்ளவை நன்கு மக்கிய பின்னரே குழியை திறக்க வேண்டும்.
  • இதற்க நான்கு மாக காலம் தேவைப்படும் பிறகு பெரும்பாலான பருத்தி தண்டுகள் மக்கிவிடும்.
  • இந்த மக்கிய உரமானது நன்கு மக்கிய மண்புழு உரத்திற்கு சமமானது.
  • இது நுண்ணோட்ட மறுசுழற்சிக்கும்  உதவுகிறது மற்றும் மண்ணில் உள்ள சில நோய் கிருமிகளையும் அழிக்கிறது.

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *