புரட்டாசி பட்டத்தில் பருத்தி பயிரிட வேண்டுகோள்

“புரட்டாசி பட்டத்தில் பருத்தி பயிரிட்டால் கூடுதல் விலை கிடைக்கும்,”என, வேளாண் வணிக துணை இயக்குநர் முத்துமுனியாண்டி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:

  • பருத்தி அதிகளவில் நுகரும் தமிழ்நாடு 2012-2103ல் 5 லட்சம் பொதிகள் பருத்தியை உற்பத்தி செய்தது. தமிழகத்தில் மாசி மற்றும் புரட்டாசி பட்டத்தில் பருத்தி பயிரிடப்படுகிறது. தற்போது, மாசியில் பரியிடப்பட்ட பருத்தி, விவசாயிகளால் இருப்பு வைத்து விற்பனைக்கு வந்துகொண்டுள்ளது.
  • மேலும், மற்ற மாநிலங்களில் இருந்து மிகக்குறைந்த அளவில் வரத்துள்ளது. தற்போது பருத்தி குவிண்டாலுக்கு 4,800 ரூபாய் முதல் 5,200 ரூபாய் வரை விற்பனையாகிறது.
  • வரும் மாதங்களில் பருத்திக்கான தேவை நிலையாக இருந்தாலும், எதிர்பார்க்கப்படும் குறைந்த வரத்து விலையை உயரச் செய்யும். மேலும், கரீப் பருவ அறுவடை சமயமான அக்டோர் முதல் டிசம்பர் 2013ல், அனைத்து முக்கிய பருத்தி பயிரிடும் மாநிலங்களில் இருந்து எதிர்பார்க்கப்படும் அதிகவரத்து பருத்தி விலையை நிலைப்படுத்தும்.
  • தமிழ்நாடு வேளாண் பல்கலையில் இயங்கிவரும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையத்தின் ஆய்வு முடிவு ஆகஸ்ட் – செப்டம்பர் 2013ல் பருத்தி விலை, குவிண்டாலுக்கு 5,000 ரூபாய் முதல் 5,500 ரூபாய் வரை இருக்குமென உறுதி செய்கின்றன. எனவே, விவசாயிகள் முன்னறிவிப்பு விலையின் அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்கலாம்.
  • மாவட்டத்தில் பருத்தி விதைப்பதற்கு உகந்தது ஆவணி முதல் புரட்டாசி பட்டமாகும்.
  • எனவே, விவசாயிகள் இப்பட்டத்தில் பருத்தி சாகுபடி செய்தால் வரும் ஜனவரி, பிப்ரவரியில் குவிண்டாலுக்கு 4,800 ரூபாய் முதல் 5,100 ரூபாய்வரை விலை பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
  • எனவே, பருத்திக்கு கூடுதல் விலைகிடைக்க வாய்ப்புள்ளதால், விருதுநகர் மாவட்ட விவசாயிகள் இப்பட்டத்தில் பருத்தியை சாகுபடி செய்து பயனடைய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர் 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *