மழைநீர் தேங்கியதால் பருத்தியில் வாடல் நோய்

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில், மழைநீர் தேங்கியதால், பருத்தியில் வாடல் நோய் ஏற்பட்டுள்ளது.

நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி, பெருமளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால், பருத்தியில் வாடல் நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாமகிரிப்பேட்டை அட்மா சார்பில், லத்துவாடி வேளாண் அறிவியல் நிலைய, உழவியல் உதவி பேராசியர் டாக்டர் அழகுதுரை, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர், பருத்தி செடிகளை பார்வையிட்டனர்.பின், அவர்கள் கூறியதாவது:

  • தொடர் மழை காரணமாக, பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி, செடிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை. மேலும், சல்லி வேர்கள் தண்ணீரை உறிஞ்சவில்லை.
  • நோய் தாக்கப்பட்ட பருத்தி வயல்களில், தண்ணீரை உடனடியாக வெளியேற்றி, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
  • மேலும், பசுந்தாள் உர பயிர்களை, இடையே சுழற்சியாக சாகுபடி செய்ய வேண்டும்.
  • பிற செடிகளுக்கு நோய் பரவாமல் தடுக்க, ‘டிரைக்கோ டெர்மா விரிடி’ என்ற மருந்தை இரண்டு கிராம் அளவு, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, செடிகளை சுற்றி ஊற்ற வேண்டும்.
  • இவ்வாறு செய்தால், வாடல் நோயிலிருந்து பருத்தி செடிகள் மீட்கப்படலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *