மானாவாரி பருத்தியில் வேர் அழுகல் நோய்

பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்தியில் வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த யோசனை  தெரிவித்துள்ளார் வேளாண்மை இணை இயக்குநர் வே. அழகிரிசாமி.இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரியில் சாகுபடி செய்துள்ள பருத்தியில் நீண்ட நாளாக மழை இல்லாததாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தற்போது பெய்யும் மழையினாலும் பருத்தியில் வேர் அழுகல் நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நோய் மண்வாழ் பூஞ்சையான ரைசோகடோனியா மற்றும் ஸ்கிளிரோஸியம் மூலம் ஏற்படுகிறது.

இதனால் பருத்தியின் வேர்ப்பகுதி தாக்கப்பட்டு, செடிகள் வாடி காய்ந்துவிடுவதோடு, இலைகள் கருகி முழுமையாக காய்ந்துவிடும்.

இந்நோய் பாதிக்கப்பட்ட செடியில் வேரின் தோல் பகுதி சிதைந்து நார்போல காணப்படும். இந்நோயை கட்டுப்படுத்த முதலில் தாக்குதலுக்கு உள்ளான செடிகளை பிடுங்கி அழிக்க வேண்டும்.

பிறகு, பாதிக்கப்பட்ட இடத்திலும், அதைச் சுற்றியுள்ள செடிகளின் வேர்ப்பகுதி நனையும்படி டீரைப்ளாக்சிஸ்ட்ரோபின் 10 டெபுகோனோசால் 1 கிராம் 1 லிட்டர் தண்ணீர் அல்லது கார்பன்டசிம் 1 கிராம் 1 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து கரைசலை மண்ணில் ஊற்ற வேண்டும்.

மேலும், பொட்டாசியம் நைட்ரேட் 1% கரைசலை விதைத்த 50 நாள்கள் கழித்து 15 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிப்பதால் ஆல்டர்நேரியா இலைப்புள்ளி நோய் வராமல் தடுக்கலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *