பழக்கன்றுகள் விற்பனை

மதுரை மாவட்டம் பூச்சுத்தியில் அரசு தோட்டக்கலைப் பண்ணை சார்பில் பழச்செடிகள் மற்றும் காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பூஞ்சுத்தியில் அரசு தோட்டக்கலைத்துறை சார்பில் அனைத்து வகையான பழக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.    சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அதிக மகசூல் தரும் பங்களப்பளி,
காளப்படி, சேலம், சப்போட்டா, இமாம் உள்ளிட்ட உயர்ரக மாங்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் ஒட்டு மரக்கன்றுகளும் தயார் செய்யப்படுகிறது. இதேபோல் உயர்தர வெளிநாட்டு பாப்பாளி வகை கன்றுகள், சப்போட்டா பழம், கொய்யாக்கன்றுகள், புளி, மிளகாய் போன்ற கன்றுகளும் உற்பத்தி செய்யப்படுகிறது.  தோட்டக்கலைத்துறை சார்பில் தனிப்பணியாளர்கள் இவற்றை பராமரித்து வருகின்றனர். கொய்யா, சப்போட்டா போன்ற  கன்றுகளுக்கு சொட்டு நீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

இது குறித்து கலெக்டர் சுப்பிரமணியன் கூறுகையில், “ இங்கு உற்பத்தி செய்யப்படும் பழக்கன்றுகள் பல்வேறு நிலையில் பராமரிப்பு செய்யப்பட்டு பொது மக்களுக்கு விற்பனை வழங்கப்படுகிறது. அனைத்து வகையான கன்றுகளும் இங்கு கிடைக்கும். மதுரை மாவட்டத்தில் கொய்யா பழம் அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இங்கு கூடுதலாக ஆயிரம் கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது’’ என்றார்.

நன்றி: தினகரன்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *