கோடை உழவு செய்தால் மழைநீர் வீணாகாது

கோடை உழவு செய்வது குறித்து கரூர் மாவட்டத்தின் வேளாண் துறை அதிகாரி கூறியதாவது:

  • இந்த ஆண்டு சராசரி மழையளவு, 652.2 மி.மீ., கோடை பருவத்தில் பெய்ய வேண்டிய சராசரி மழை, 109.5 மி.மீ., ஆனால், 850 மி.மீ., மழை பெய்துள்ளது.
  • மழையை பயன்படுத்தி, கோடை உழவு செய்வதால் மழைநீர் ஓடி வீணாகாமல் அந்த நிலத்திலேயே சேமிக்கப்படுகிறது. மண் அரிப்பு தடுக்கப்படுகிறது.
  • மண்ணிற்குள் இருக்கும் கூட்டு புழுக்கள் அழிக்கப்படுகின்றன.
  • தென்மேற்கு பருவ மழை காலத்தில் பெய்கிற மழையை கொண்டு மானாவாரி பயிர்களை சாகுபடி மேற்கொண்டு பயனடைலாம்.
  • கோடை உழவுப் பணிக்கு, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
  • வேளாண் பொறியல் துறையில் உழவு இயந்திரம் வாடகையாக மணிக்கு, 340 ரூபாய், மண் தள்ளும் இயந்திரம் மணிக்கு, 840 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
  • தேவைப்படும் விவசாயிகள் வாடகை தொகையை முன் கூட்டியே செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்யலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *