நீர் பற்றாக்குறையால் சொட்டு நீர்ப்பாசனம் அதிகரிப்பு

நடப்பாண்டு துவக்கத்தில் இருந்தே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், பாசனப்பகுதி விவசாயிகள் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனத்துக்கு மாறி வருகின்றனர்.

கோபிசெட்டிபாளையம் பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகரி, தெங்குமரஹாடா, குந்தால கெத்தை, பில்லூர், மொய்யாறு ஆகிய பகுதிகளில் மழை பொய்த்ததால், அணையின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளது.
சென்ற இரண்டு ஆண்டுகளாகவே பாசன நேரத்தில், தண்ணீர் பற்றாகுறை நிலவுகிறது.

இதனால், விவசாயிகள் பலரும் சொட்டு நீர்ப்பாசனத்துக்கு மாறி வருகின்றனர்.

கோபி வேளாண் துறை உதவி இயக்குனர் ஆசைத்தம்பி கூறியதாவது:

  • சொட்டு நீர்ப்பாசனம் மூலம், மூன்றில், ஒரு பங்கு தண்ணீர் மிச்சமாகும்.
  • தென்னை மரத்துக்கு, 80 முதல், 100 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
  • ஏக்கருக்கு, 8,000 முதல், 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் போதுமானது.
  • சாதாரண முறையில் தண்ணீர் பாய்ச்சும் போது, 10 மடங்கு தண்ணீர் கூடுதலாக தேவைப்படும்.
  • கரும்பு நடவுக்கு கூலியாட்கள் பற்றாக்குறை அதிகளவில் உள்ளது. கரும்பு நடவு செய்யும் போதும், தோகைஉரிக்கவும், உரம் வைக்கவும் போது ஆட்கள் தேவை.
  • சொட்டு நீர்ப்பாசனத்தில் கரும்பு நடவு செய்யும் போது, தோகை உரிக்கவும், உரம் வைக்கவும் கூலி ஆட்கள் தேவையில்லை.
  • சொட்டு நீர் பாசனத்திலேயே உரத்தை கலந்து விடலாம்.
  • மஞ்சள், காய்கறி உள்ளிட்ட பயிர்களுக்கு, தெளிப்பான் முறை பயன்படுத்தப்படுகிறது. இதற்கும் மானியம் வழங்கப்படுகிறது.

சென்ற ஆண்டை விட, நடப்பாண்டு சொட்டு நீர் பாசனத்துக்கு ஏராளமான விவசாயிகள் மாறியுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: யாஹூ


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *