பஞ்சாபின் நிலத்தடி நீர் பிரச்னை

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பஞ்சாப் மாநிலம் பசுமை புரட்சியின் ஒரு வெற்றி சின்னமாக இருந்தது. இந்திய முழுவதிற்கும் உணவு விளைவிக்கும் மாநிலமாக பெயர் எடுத்தது. இப்போது, பஞ்சாப் மாநிலத்தில் விவசாயம் ஒரு பெரிய நெருக்கடியை சந்திக்கிறது.

நிலத்தில் நீர் மட்டம் மிகவும் குறைந்து வருவது ஆய்வுகளில் தெரிந்து உள்ளது.
ஐந்து நதிகள் பாயும் மாநிலத்தில் இப்போது நீர் பற்றாக்குறை
இந்த நிலைமைக்கு வர காரணம் என்ன?

பசுமை புரட்சி என்ற பெயரில் வருடத்தில் hybrid விதைகள் விவசாயிகளுக்கு விநியோக படுத்த பட்டன. இந்த விதைகள் நன்றாக வளர நிறைய உரமும் நீரும் தேவை பட்டது. அனால் நல்ல விளைச்சல் கிடைத்தது. இதனால் விவசாயிகள் அதிகமாக பயன் படுத்த ஆரம்பித்தனர்.
பஞ்சாபின் தட்ப வெப்ப நிலைக்கு நெல் சாகுபடி சரியே இல்லாதது. அனால் பஞ்சாபிய விவசாயிகள் நெல் சாகுபடியில் தீவிரமாக இறங்கினர்.

வருடத்தில் இரண்டு முறை சாகுபடி செய்தனர். நதியில் நீர் இல்லை என்றால் என்ன? பம்ப்செட் போட்டு நீரை நிலத்தில் இருந்து உருஞ்சினர். இப்போது 4 மீட்டர் ஆழத்தில் இருந்த நீர் நிலை 40 மீட்டர் வரை குறைந்து விட்டது. நெல் விதைகளுக்கு 24-28  தடவை பாசனம் செய்ய வேண்டி இருக்கிறது.
பஞ்சாபில் உள்ள 138 தாலுகாக்களில் 118 தாலுகாக்களில் நீர் மட்டம் ஆபத்தான அளவிற்கு குறைந்து விட்டது
அளவிற்கு அதிகமாக நீரை பயன் படுத்துவது, நிலத்திற்கும் தட்ப வெப்பத்திற்கும் பொருந்தாது சாகுபடி செய்வது, ஒரே பயிரை திரும்பி திரும்பி பயிர் இடுவது போன்றவையே காரணங்கள். தமிழ் நாட்டில் நாம் விழிப்போடு இருக்க வேண்டும்!

நன்றி: Down To earth இனைய தளம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *