ராஜஸ்தான் தரும் பாடங்கள்

நமக்கெல்லாம் தெரியும், ராஜஸ்தான்,  ஒரு வரட்சியான மாநிலம் என்று. மாநிலத்தின் பெரிய பகுதிகள், தார் பாலைவனம். மிச்ச இடங்களில், கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள் முன்பு பயிரிட பட்டு வந்தன. சில வருடங்களாக, அந்த மாநிலம், “வளர்ச்சி” வழியை நாடியது. எல்லா விதமான தொழிற்சாலைகளும் வரவேற்க பட்டன. இதனால் என்ன ஆயிற்று? நில நீர் வெகு வேகமாக உருஞ்சபட்டு, இப்போது மாநிலத்தில் நீர் பற்றாகுறை தலை விரித்து ஆடுகிறது. புகை வண்டி மூலம், நீர் கொண்டு, பெரிய நகரங்களுக்கு கொடுக்கபடுகின்றன. சில வருடங்களில், ராஜஸ்தானில் இருந்து, “நீர் அகதிகள்” மற்ற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவலம நடக்க கூடிய சாத்தியகூறுகள் அதிகம்.

ராஜஸ்தான் செய்த தவறுகள் என்ன? தமிழ்நாட்டுக்கு அவை என்ன பாடம் தருகின்றன?

– வளர்ச்சி என்று, கண் மூடி தனமாக, எல்லா விதமான தொழிற்சாலைகளையும் வர விட்டது. IT பார்க், 5  ஸ்டார் ஹோட்டல் என்று கட்ட அனுமதி கொடுத்தது. ஜெய்பூர் போன்ற ஊர்களில், மால்கள் கட்ட விட்டது. ஒவொரு 5 ஸ்டார் ஹோடேலும், ஒரு நாளைக்கு ஒரு பேருக்கு 600 லிட்டர் நீர் வீணாக்குகிறது. ஒரு கோல்ப் course 20000 வீடுகளுக்கான நீர் தேவையை எடுத்து கொள்கிறது.
– பளிங்கு கற்கள் சுரங்க கம்பனிகள், ஒவொரு மணி நேரமும், 3 மில்லியன் லிட்டர் நீர் உறிஞ்சி எடுத்து, கல்களை சுத்த படுத்துகின்றன
– மாநில வேளாண்மை துறை, நீர் உறுஞ்சி பயிர்களான கரும்பு போன்ற பயிர்களை அனுமதித்தது. கரும்புக்கு, நெல் மற்றும் கோதுமை வளர தேவையான நீர் போன்று மூன்று மடங்கு நீர் தேவை!
– வெளி நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய பூக்கள் வளர உதவி செய்தது. இந்த பூக்கள் நன்றாக இருக்க AC  நீர் தேவை.
– கோக் போன்ற நீர் உறுஞ்சி தொழிற்சாலைகளை செயல் பட அனுமதி கொடுத்தது.

தமிழ்நாடும், ஒரு விதத்தில் பார்த்தல், நீர் பற்றாக்குறை மாநிலம் தான். வருடத்தில், 3  மாதம் மழை. ஒரே ஒரு பெரிய ஆற்றிலும், நீர் வர அக்கம் பக்க மாநிலத்தோடு சண்டை. நாமும், வெகு வெகு வேகமாக நிலத்தடி நீரை உறுஞ்சி கொண்டு இருக்கிறோம். கோயம்பத்தூர் போன்ற ஊர்களில், 1000 அடி போர் பம்புகள் சாதாரணம.  பூமிக்குள்ளே எவ்வளவுநீர் இருக்கிறது என்றே தெரியாத நிலையில், மேலும் மேலும் ஆழமாக borewell  போடுகிறோம். கண்ட கண்ட நீர் உறுஞ்சி தொழிற்சாலைகள் எல்லாம் செயல் பட விட்டிருக்கிறோம். கோல்ப், 5  ஸ்டார் ஹோட்டல் மட்டும் இல்லாமல், பெரிய பெரிய அபர்த்மேன்த்ஸ் ப்ளாட்ஸ் எல்லாம் எல்லா ஊர்களிலும் வந்து கொண்டிருகின்றன. அரசும், மக்களும் விழித்து கொள்ளாவிட்டால், இங்கும் இந்த மாதிரியான நிலை வர ரொம்ப நாள் ஆகாது

நன்றி:  Dsector


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *