சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் நோய் தடுக்கும் திறன்

சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் மண் மற்றும் இலை வழி மூலம் பரவும் நோயை கட்டுப்படுத்துகிறது,

  • சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ், மண்ணின் மூலம் பரவும் நோய்களுக்கான வேரழுகல், வாடல் நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.
  • தவிர, இலை வழி மூலம் பரவும் பூசான நோய்களான குலைநோய், இலை உறை அழுகல் நோய், இலைப் புள்ளி நோய் ஆகியவற்றின் பாதிப்பையும் குறைக்கிறது.
  • தவிர, பயிர்களை தாக்கும் மற்ற பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.
  • இந்த பாக்டீரியம் மற்ற உயிர் எதிர் காரணிகளான டிரைக்கோடெர்மா விருடி மற்றும் பேசில்லஸ் ஆகியவற்றுடன் நன்கு ஒற்றுமை உடையதாக உள்ளது.
  • அவற்றை கூட்டாக பயன்படுத்தும்போது, நோய் கட்டுப்படுத்தும் திறன் அதிகரிக்கிறது.
  • இந்த பாக்டீரியம் நோய்களைக் கட்டுப்படுத்துவோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்களான ஆக்ஸின், ஜிப்ரலின் மற்றும் இன்டோல் அசிடிக் அமிலம் ஆகியவற்றை சுரந்து பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

இவ்வாறு ஒரு அறிக்கையில் வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *