மஞ்சள் அறுவடையில் தொழில்நுட்பம்

மஞ்சள் அறுவடையின் போது, தொழில் நுட்பங்களை கடைபிடித்து விவசாயிகள் பயன்பெறலாம்.

  • தற்போது, மஞ்சள் பயிர் குறுகிய கால, மத்திய மற்றும் அதிக வயதுடைய ரகங்கள் அறுவடைக்கு வருகின்றன.
  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது மற்றும் இலைகள் காய்ந்து விடுவது போன்ற அறிகுறிகள் மூலம் மஞ்சள் முதிர்ச்சியை அறியலாம்.
  • மஞ்சள் அறுவடை ஜனவரியில் துவங்கி மார்ச் வரை நீடிக்கிறது.அறுவடை செய்யும் பத்து நாட்களுக்கு முன், தரையின் மேல்மட்டத்தில் தண்டு பகுதியை அறுத்து விடவேண்டும்.
  • அவ்வாறு செய்தால், விரைவில் ஈரப்பதம் குறைந்து மஞ்சள் முதிர்ச்சியடையும்.
  • மஞ்சளை சாணி நீர் கொண்டு வேகவைக்கக் கூடாது.
  • வேகவைக்கும் தண்ணீர் அமிலதன்மை உடையதாய் இருந்தால், ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு கிராம் சமையல் சோடா உப்பு சேர்த்து 45 நிமிஷம் வரை வேகவைக்க வேண்டும்.
  • அறுவடைக்கு பின், மஞ்சளை சேமிப்பது ஒரு முக்கியமான தொழில் நுட்பமாகும்.
  • விதைக்கு தேர்வு செய்யும் மஞ்சளை, கிழங்கு அழுகல் நோய் தாக்காத தோட்டங்களில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்.
  • அதை கார்பன்டசிம் மருந்து கரைசலில் ஒரு கிராம் மற்றும் மானோ குரோட்டபாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மி.லி., என்ற அளவில் கலந்து தயாரிக்கப்பட்ட கரைசலில் 20 நிமிஷம் நனைத்து சேமிக்க வேண்டும்.
  • அதனால், விதை மஞ்சளை கிழங்கு மற்றும் செதில் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.

இவ்வாறு மஞ்சள் சாகுபடி வெண்ணந்தூர் ஒன்றிய தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *