மானாவாரி மணிலா சாகுபடி டிப்ஸ்

மானாவாரி மணிலா பயிரிட்டுள்ளவர்கள் மேலுரமாக ஜிப்சம் இட்டு மகசூலை அதிகரிக்கலாம்

  • மானாவாரி மணிலா பயிர் இப்போது பூ பூக்கும் நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் காய்கள் முதிர்ச்சி அடையும் பருவம் வரை சுண்ணாம்புச் சத்து 90 சதவீதத்துக்கும் அதிகமாகத் தேவை.
  • இதனால் மணிலாவுக்கு ஜிப்சம் மேலுரமாக இடுவது அவசியம். சுண்ணாம்பு சத்தை மணிலா செடிகள் வேர் மூலம் மண்ணில் இருந்து உறிஞ்சி, இலை திசுக்களில் நிலை நிறுத்திக் கொள்கிறது. பின்னர் வளரும் காய்களுக்கு சத்தை விழுது மூலம் இறங்கிச் செல்வதைத் தடுத்து விடுவதும் ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் அறியப்பட்டுள்ளது.
  • மணிலாவில், சுண்ணாம்புச் சத்து தேவையை பூர்த்தி செய்தால் மட்டுமே, பொக்கு காய்கள் குறைந்து, திரட்சியுடன் கூடிய முதிர்ந்த காய்கள் கிடைக்கும்

இடுமுறை

  • மணிலா பயிரில், பூ பூத்த நிலையில் இருந்து அதற்கு தேவையான சுண்ணாம்புச் சத்தை மண்ணில் இட்டு ஈடுசெய்ய வேண்டும்.
  • இதற்கு ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை மேலுரமாக இட வேண்டும்.
  • மணிலா விதைப்பு செய்த 6 முதல் 9 வார காலத்துக்குள் மண்ணில் போதிய ஈரப்பதம் உள்ள நேரங்களில் இட்டு, மண்ணை கைக் களை மூலம் 3 செ.மீட்டர் ஆழத்துக்கு நன்கு கிளறி விட வேண்டும்.
  • மண்ணில் நேரடியாக இடுவதற்கு பதிலாக, நன்கு பொடி செய்த ஜிப்சத்தை துணியின் மூலம், கைகளால் செடிகளைச் சுற்றி தூவி, மண்ணை கிளறி விடுவதால் மட்டுமே, ஒரு ஏக்கரில் 100 முதல் 200 கிலோ அளவுக்கு கூடுதல் மகசூல் கிடைக்கும்.
  • கூடுதல் நன்மை தரும் கந்தகச் சத்து வேலூர் மாவட்டத்தில் உள்ள மானாவாரி நிலங்களில் தொடர்ந்து மணிலா பயிரிடப்பட்டு வருவதால், மண்ணில் உள்ள கந்தகச் சத்து அளவு குறைந்து வருகிறது.இதனால் கூட மணிலா பயிரில் மகசூல் குறையும் வாய்ப்பு உள்ளது. ஜிப்சம் மேலுரமாக இடுவதால், இதில் உள்ள கந்தகச் சத்து மணிலாவுக்கு கிடைத்து மகசூல் அதிகரித்துள்ளதும் ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
  • மானியத்தில் ஜிப்சம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் இப்போது ஜிப்சம் விற்பனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அணைக்கட்டு வேளாண்மை உதவி இயக்குநர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *