பயிர் செய்யும் முன் மண் பரிசோதனை

”விவசாய நிலங்களுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதே சிறந்த முறையாகும்” என, கோவை வேளாண் பல்கலை பயிர் மேளாண்மை துறை இயக்குனர் வேலாயுதம் பேசினார்.

கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுனத்தில் மண் பரிசோதனை குறித்த கருத்தரங்கு நேற்று நடந்தது. இதில் வேளாண் பல்கலை பயிர் மேலாண்மை துறை இயக்குனர் வேலாயுதம் பேசியதாவது:

  • தமிழகத்தில் காலங்காலமாக இயற்கை முறை விவசாயத்தைதான் நம் விவசாயிகள் செய்து வந்தனர்.
  • 1950ம் ஆண்டுகளில் இயற்கை விவசாயம் மூலம் 50 மில்லியன் டன்கள் உணவு உற்பத்தி செய்யப்பட்டது.
  • 1960ம் ஆண்டுகளுக்கு பிறகு, மக்கள் தொகையில் எண்ணிக்கை அதிகரித்ததால், உணவு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால், விஞ்ஞான முறைகளை பின்பற்றி விவசாயம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
  • அதிக அளவில் ரசாயன உரமங்களை பயன்படுத்தியதால், மகசூல் அதிகம் கிடைத்தது. தொடர்ந்து ரசாயன உரங்களை பயன்படுத்தியதால் மண் வளம் பாதிக்கப்பட்டு விட்டன.
  • இனி விவசாயிகள் ரசாயன உரங்களை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்துவதே நல்லது என, வேளாண் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
  • உலக அளவில் 10 மில்லியன் எக்டர்கள் நிலங்கள் மண் வளம் பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய பயன்படாமல் இருப்பதாக சமீபத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
  • இதில், தமிழகத்தில் மட்டும் 4.5 லட்சம் எக்டர் நிலம் மண் வளம் பாதிக்கப்பட்டு உள்ளன.
  • இனி வரும் காலங்களில் விவசாய நிலங்களுக்கு உரமாக ஆடு, மாடுகளின் சானம் மற்றும் தாவர உரங்களை பயன்படுத்துவதுதான் சிறந்தது.
  • இதில், பயிருக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.
  • முன்பு விவசாய தொழிலுக்கு கால்நடைகளை பயன்படுத்தியதால் அதிக எண்ணிக்கையில் ஆடு, மாடுகள் அதிகம் வளர்க்கப்பட்டன.
  • இப்போது நவீன கருவிகளை பயன்படுத்துவதால், அவற்றின் எண்ணிக்கையும் குறைந்து விட்டன. அதனால் கால்நடை எருக்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
  • எனவே, விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு இயற்கை உரங்களை பயன்படுத்துவதோடு, பயிர் செய்யும் முன் மண் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும். இவ்வாறு, வேலாயுதம் பேசினார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *