மரங்களும் அவற்றின் பயன்களும்

நமது நாட்டில் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. அவைகள் பல்வேறு வகையான பயன்பாட்டிற்கு உதவுகின்றன. அதைப் பற்றி காண்போம்.

  • கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளபோது, அதற்கு நிழலாக அமையும் வகையில் வேம்பு, புங்கன், பு+வரசு, மலைப்பு+வரசு, காட்டு அத்தி, வாதம் போன்ற மரங்கள் உதவுகின்றன.
  •  பயிர்களுக்கு உரமாக, அதாவது பசுந்தழை உரத்திற்கு புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சு+பாபுல், பு+வரசு போன்ற மரங்கள் பயன்படுகின்றன.
  •  கால்நடை தீவனத்திற்கு உதவும் வகையில் ஆச்சா, சு+பாபுல், வாகை, ஒதியன், தூங்குமூஞ்சி, கருவேல், வெள்வேல் போன்ற மரங்கள் உள்ளன.
  •  சீமைக்கருவேல், வேலமரம், யு+கலிப்டஸ், சவுக்கு, குருத்தி, நங்கு, பு+வரசு, சு+பாபுல் போன்ற மரங்கள் விறகாகவும் பயன்படுகின்றன. கருவேல், பனை, தேக்கு, தோதகத்தி, கருமருது, உசில், மூங்கில், விருட்சம், வேம்பு, சந்தனவேங்கை, கரும்பு+வரசு, வாகை போன்ற மரங்கள் கட்டுமானப் பொருட்களுக்கு பயன்படுகின்றன.
  •  மருந்து பொருட்கள் தயாரிக்க கடுக்காய், தானிக்காய், எட்டிக்காய் வேம்பு, பின்னை, புங்கம், இலுப்பை, இலவம் போன்ற மரங்களும் உதவுகின்றன.
  •  ஆனைப்புளி, மூங்கில், யு+கலிப்டஸ், சு+பாபுல் போன்ற மரங்கள் காகிதம் தயாரிக்க பயன்படுகின்றன.
  •  பெருமரம், எழிலைப்பாலை, முள்ளிலவு போன்ற மரங்கள் தீப்பெட்டி தொழிலுக்காக பயன்படுகின்றன. காட்டிலவு, முள்ளிலவு, சிங்கப்பு+ர் இலவு போன்ற மரங்கள் பஞ்சிற்காகவும் வளர்க்கப்படுகின்றன.
  •  தோல் பதனியிடும் தொழில் மற்றும் மை தயாரிக்க வாட்டில், கடுக்காய், தானிக்காய் போன்ற மரங்கள் பயன்படுகின்றன.
  • பனை, ஆனைப்புளி போன்ற மரங்கள் நார் எடுப்பதற்காக பயன்படுகிறது.
  •  வேம்பு, புங்கம், தங்க அரளி போன்ற மரங்கள் இயற்கை பு+ச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது.
  • கோவில்களில் வேம்பு, வில்வம், நாகலிங்கம், தங்க அரளி, மஞ்சள் அரளி, நொச்சி, அரசு போன்ற மரங்கள் வளர்க்கலாம்.
  • நீர் நிலைகளான குளக்கரையில் மருது, புளி, ஆல், அரசு, நாவல், அத்தி, ஆவி, இலுப்பை போன்றவையும், நீர்ப்பரப்பில் கருவேல், நீர்மருது, நீர்க்கடம்பு, மூங்கில், வேலிக்கருவேல், நாவல், தைல மரம், புங்கன், இலுப்பை மற்றும் இலவமரம் போன்ற மரங்களும் வளர்க்கலாம்.
  •  சாலையோரங்களிலும் புளி, வாகை, ஆல், அத்தி, அரசு போன்ற மரங்கள் வளர்க்கலாம்.

இவ்வாறு மரங்களை அதன் சுழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்து வளர்ப்பதன் மூலம் அதனுடைய பலன்களை முழுமையாக பெறலாம்.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மரங்களும் அவற்றின் பயன்களும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *