மரபணு மாற்றப்பட்ட பயிர் மூலம் வந்த களை ராட்சசன்

வயல் வெளிகளில் களை செடிகள் வருவது இயற்கை. அவற்றை பிடுங்கி எடுப்பது பரம்பரை பரம்பரையாக வந்த முறை.
அமெரிக்காவில், எல்லாம் இயந்திர மயமாகபட்ட விவசாயத்தில், இதற்கு ஒரு வழி தேடினார்கள். மொன்சாண்டோ Monsanto நிறுவனம் இருக்கிறதே வழி கொடுக்க.

glyphosate (Roundup) என்ற ஒரு களை கொல்லி கண்டு பிடித்தார்கள்.

ஆனால் இந்த ரசாயன களை கொல்லி வயலில் தெளித்தால், வயலில் உள்ள சோளம், சோயா போன்ற செடிகளும் பாதிக்க படுமே? உடனே, சோளத்தில் உள்ள மரபணுவை மாற்றி களை கொல்லி (Genetically modified for glyphosate resistance) எதிர்ப்பு சக்தியை கொண்டு வந்தார்கள்.
அதாவது, விவசாயிகள், கண்ணை மூடி கொண்டு glyphosate வயலில் தெளிக்கலாம். களை செடிகள் அழிந்து போகும். ஆனால் சோளம் செடிக்கு ஒன்றும் ஆகாது.

இதில் என்ன என்றால் விவசாயிகள் மரபணு மாற்ற பட்ட விதைகளை மொன்சாண்டோ நிறுவனத்தில் இருந்து மட்டுமே வாங்க முடியும். விதைகளின் ஏக போகம் அவர்களுக்கு. இருந்தாலும், அமெரிக்க விவசாயிகள் இந்த வழிக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறினர். 2010 வருடத்தில் கிட்டத்தட்ட 90% சதவீத சோளம் சோயா சாகுபடி இப்படிதான் நடந்தது.
ஆனால், இயற்கை என்று ஒன்று இருப்பதை எல்லாரும் மறந்து விட்டார்கள். இயற்கைக்கு மாறாக எதாவது நாம் செய்தல், இயற்கை மிகவும் பலமாக எதிர் தாக்கு கொடுக்கும்.

இந்த மாதிரியான விஷ சோதனைக்கு எதிராக இயற்கையின் பதிலடி இப்போது அமெரிக்காவில் களைகொல்லி எதிர்ப்பு களை செடிகள் (Herbicide resistant weeds) புதிதாக வந்துள்ளன. இவை glyphosate மருந்திற்கு எதிர்ப்பு கொண்டுள்ளன. அது மட்டும் இல்லாமல், இவை வெகு வேகமாக வளர்கின்றன.

எந்த ஒரு மருந்திற்கும் கட்டு படுவதில்லை. அமெரிக்காவில் மில்லியன் ஏகரில் இவை பரவி உள்ளன. இது ஒரு பெரிய பிரச்னையாக உரு எடுத்து உள்ளது.

Couresy: DeMoines Register
Couresy: DeMoines Register

பால்மர் அமராந் என்ற இந்த களை செடி  எந்த களை கொல்லிக்கும் அடி பணிவதில்லை, 7 அடி வரை பூதாகாரமாக வளர்கிறது. மேலும் ஒரே செடியில் 10 லட்சம்  விதைகளை இந்த களை செடிகள் உருவாக்கு கின்றன. மிக சிறியதான இந்த விதைகள் எளிதாக காற்றில் பறந்து எங்கும் பரவுகின்றன, இந்த செடிகள் தினமும்  2″ வரை வேகமாக வளர்ந்து வயல் செடிகளை கபளீகரம் செய்கின்றன

எதற்கும் அடங்காத இந்த ராட்சசனை சமாளிப்பது எப்படி? இதை உருவாகிய மொன்சாண்டோ தான் பதில் சொல்ல வேண்டும்

இவை எல்லாம் சொல்லும் பாடம் என்ன? Genetic Engineering மரபணு மாற்றல் தொழிற்நுட்பம் மிகவும் சக்தி வாய்ந்தது. எதிர் பலன்கள் எல்லாம் தெரியாமல் குறிகிய கால பலங்களுக்காக இயற்கைக்கு மாறாக வேலை செய்தால், சிறிது காலத்திலேயே பயங்கரமான எதிர் பலன்ககள் வரும்.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “மரபணு மாற்றப்பட்ட பயிர் மூலம் வந்த களை ராட்சசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *