மரபணு மாற்றுப்பயிர்: வயல்வெளி சோதனைக்கு நிரந்தரத் தடை?

மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.

இக்குழு ஏற்கெனவே, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த இடைக்கால அறிக்கையில், “பத்தாண்டுக்கு இந்திய வயல்வெளிகளில் மரபணு மாற்றுப் பயிர்களுக்கான சோதனைகளை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்திருந்தது. ஆனால், மத்திய அரசு அதை ஏற்கவில்லை.

இந்நிலையில், தனது இறுதி அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில், கடந்த வாரம் இக்குழு தாக்கல் செய்தது. அதில், மரபணு மாற்றுப் பயிர்களை வயல்வெளிகளில் சோதனைச் செய்வதற்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் மரபணு மாற்றப் பயிர்களை விளைவிக்க தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள், அறிவியல் வல்லுநர்கள், அரசியல் கட்சிகள், விவசாயிகள் என்று பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, தில்லியில் கடந்த மாதம் போராட்டம் நடைபெற்றது.

இதனிடையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை விளைவிப்பதற்கான சோதனைகளை வயல்வெளிகளில் நடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது.

அவ்வாறான சோதனைகளை அனுமதிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்துக்கு ஆலோசனை அளிப்பதற்காக ஆறு பேர் கொண்ட தொழில் நுட்ப வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “மரபணு மாற்றுப்பயிர்: வயல்வெளி சோதனைக்கு நிரந்தரத் தடை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *