மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தொழில்நுட்ப வழிமுறை

  •  மரவள்ளி சாகுபடி நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்கு உழவு செய்து, கடைசி உழவில் ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் அல்லது இரண்டு டன் மண்புழு உரம் இட வேண்டும்.
  • டிரைகோடெர்மாவிரிடி இரண்டு கிலோ, அசோஸ்பைரில்லம் இரண்டு கிலோ, பாஸ்போ பாக்டீரியா இரண்டு கிலோ என்ற அளவில் இடவேண்டும்.
  • மேலும், ஒரு வாரம் கழித்து யூரியா 40 கிலோ, சூப்பர்பாஸ்பேட் 235 கிலோ, பொட்டாஷ், 80 கிலோ என்ற அளவில் இட்டு 90 செ.மீ.,க்கு 90 செ.மீ., அல்லது 75 செ.மீ.,க்கு 75 செ.மீ., என்ற அளவில் பார் அமைத்து, 8 அல்லது 9 முளைப்புடன் கூடிய கரணைகள், நோய் தாக்காத வயலிருந்து எடுக்கப்பட்ட கரணை நடவு செய்ய வேண்டும்.
  • நடவின்போது கரணைகளை கார்பன்டைசிம் 1 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தயாரிக்கப்பட்ட கரைகளில் 15 நிமிடம், மூழ்கி இருக்குமாறு வைக்க வேண்டும்.அதன்பின், எடுத்து நடவு செய்ய வேண்டும்.
  • மரவள்ளி சாகுபடிக்கு சொட்டு நீர்பாசனம் அமைத்து நீர்வழி உரம் கொடுப்பதன் மூலம் 15 முதல் 20 சதவீத மகசூல் அதிகரிக்கும்.
  • தவிரக் களைக்கட்டுப்பாடு, கூலியாட்கள் குறைவு, குறைந்த நீரைக்கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி ஆகிய நன்மைகள் கிடைக்கிறது.
  • மரவள்ளிக்கு அமைக்கும் சொட்டு நீர் பாசன அமைப்புக் கொண்டு, பயிர்சுழற்சி மூலம் மஞ்சள், வெங்காயம், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை ஆகிய அனைத்துப் பயிர்களுக்கும் நீர்பாய்ச்சலாம்.
  • இம்முறையில் மரவள்ளி சாகுபடியில் தொழில்நுட்பங்களை கையாண்டு கூடுதல் மகசூல் எடுத்து நல்ல வருவாய் பெறலாம்.

இவ்வாறு   தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “மரவள்ளிக்கிழங்கு சாகுபடி தொழில்நுட்ப வழிமுறை

  1. swaminathan n says:

    pls upadate all agriculture details. i have owned 5 acres. pls give suitable tips and also send us the subsidy scheme details
    n.swaminathan
    kulitalai tk karur dt tamilnadu

  2. Suresh raj says:

    இயற்கை இடுபொருள் ‘கொம்பு சானம்’ பற்றிய செய்முறை விளக்கம் மற்றும் அதன் நன்மைகள் பற்றி தகவல் இருந்தால் பகிறவும்..

Leave a Reply to Suresh raj Cancel reply

Your email address will not be published. Required fields are marked *