மரவள்ளி தேமல் நோய் தடுக்கும் வழிகள்

மரவள்ளி இறவை சாகுபடியில் ஹெக்டேருக்கு 10 முதல் 11 டன் வரை மகசூல் கிடைக்கும்.மரவள்ளியில் சொட்டு நீர்பாசன முறையில் அதிக மகசூல் கிடைக்கும்.தற்போது 2 அல்லது மூன்றாம் பருவத்தில் பயிரில் தேமல் நோய் தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது.

தேமல் நோய் அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்

  • நோய் பாதிக்கப்பட்ட செடிகளில் இருந்து மற்ற செடிகளுக்கு வெள்ளை ஈக்கள் நோயை பரப்புகின்றன.
  • ஈக்கள் இலையில் உள்ள சாற்றை உறிஞ்சுவதால் மஞ்சள் நிறம் அடைந்து வெள்ளை நிறமாக மாறிவிடுகிறது.  மகசூல் பாதிக்கும் நிலை உருவாகும்.
  • தேமல் நோயை கட்டுப்படுத்த நோய் தாக்காத செடிகளில் இருந்து நடவுக் குச்சிகளை தேர்வு செய்ய வேண்டும்.
  • செடிகளுக்கு இடையே உள்ள களைகளை அப்புறப்படுத்த வேண்டும்.
  • தழைச்சத்து அதிகளவில் இடாமல் அளவாக பயன்படுத்த வேண்டும்.
  • நோய் பாதித்த செடிகளை கண்டுபிடித்து அழிக்க வேண்டும்.
  • “மீதைல் டெமெட்டான்’ இரண்டு மி.லி., ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது வேம்பு எண்ணெய் ஐந்து மி.லி., லிட்டர் தண்ணீருடன் கலந்து நோய் பாதிக்கப்பட்ட செடிகளில் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.
  • இதன் மூலம் வெள்ளை ஈ பரவாமல் நோயை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு உதவி இயக்குனர் சிந்தாமணி வெளியிட்ட அறிக்கை  கூறப் பட்டுள்ளது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *