மரவள்ளியில் நுண்ணூட்ட மேலாண்மை

மரவள்ளியில் நுண்ணூட்ட கலவை தெளிப்பதால் துத்தநாகசத்து பற்றாக்குறை நீங்கி, செடிகளின் வளர்ச்சி நன்கு இருக்கும்

  • நாமக்கல் வட்டாரத்தில், வளர்ச்சி நிலையில் உள்ள மரவள்ளியில் பல வயல்களில் இரும்பு மற்றும் துத்தநாகம் நுண்ணூட்டம் பற்றாக்குறை காணமுடிகிறது.
  • அதனால், இலைகள் வெளுத்து இளம் மஞ்சளாகி, சிறுத்து மெலிந்து காணப்படுகிறது.
  • தற்போது, வெப்பநிலை அதிகரித்துள்ளதால், வெப்பம் தாங்காமல் இலைகள் கருக ஆரம்பித்துவிடும்.
  • அதை தவிர்க்க, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம், பெரஸ்சல்பேட், 5 கிராம் ஜிங்க்சல்பேட் மற்றும், 5 கிராம் யூரியா வீதம் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு இலைகளின் மேல் நன்கு படியும்படி தெளிக்கவேண்டும்.
  • நுண்ணூட்ட கலவை இலைகளுடன் மேல் நன்கு படிய, 1 லிட்டர் தெளிப்பு திரவத்துக்கு, 1 லிட்டர் ஒட்டும் திரவம் வீதம் கலந்து தெளிப்பது சிறந்தது.
  • இதுபோல், 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
  • நுண்ணூட்ட கலவை தெளிப்பதால் இரும்பு, துத்தநாகசத்து பற்றாக்குறை நீங்கி செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.

இவ்வாறு நாமக்கல் தோட்டக்கலை உதவி இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *