அழுகி போகும் காய்கறிகள் மூலம் பயோ காஸ்

கடலூரை அடுத்து உள்ள பிள்ளயார் குப்பத்தில் உள்ள மக்கள் மீதம் உள்ள விவசாய கழிவுகள் மற்றும் அழுகி போகும் காய்கறிகள், மிஞ்சி போன உணவு பொருட்களை வைத்து   கொண்டு பயோ காஸ் (Biogas) உற்பத்தி செய்து வருகின்றனர்.

இந்த முறை மிகவும் எளிமையானது:

Photo courtesy: Hindu
  • ஊரில் உள்ள ஹோட்டல், கடைகளில் பக்கெட் களை கொடுத்து வைத்து உள்ளனர்.
  • இவற்றில், அழுகி போகும் காய்கறிகள், மிஞ்சி போன உணவு பொருட்களை கொட்டுகின்றனர்.
  • இவற்றை மாலையில் சேர்த்து, ஒரு பயோ காஸ் டிஜெச்ட்டர் மூலம் மெதேன் காஸ் உற்பத்தி ஆகிறது.
  • ஆறு மணி நேரம் கழித்து Methane biogas காஸ் தானாக வருகிறது.
  • இந்த காஸ் ஒரு ஸ்டவ் சேர்த்து வைத்து, தினமும் இரண்டு முறை சமைக்க பயன் படுத்த படுகிறது.
  • ஊரில் தானே Thane புயல் வருவதற்கு முன் விறகை பயன் படுத்தி சமையல் செய்து வந்தனர். புயலுக்கு பின் விறகு தட்டுபாடு வந்ததால் இந்த முயற்சி எடுத்தனர்.
  •  இதனால், எரிபொருள் தட்டுப்பாடும் நீங்கியது. விறகால் சமைக்கும் பொது வரும் புகை காரணமாக வரும் நோய்களும் கட்டு படுகிறது
  • இந்த இயந்திரம் விலை 22000.

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *