ஆடாதோடா உயிர்வேலி

  • ஆடாதோடா மூலிகையானது அகாந்தேசி என்ற தாவரவியல் குடும்பத்தில் ஜஸ்டிசியா ஆடாதோடா என்ற தாவரவியல் பெயரால் வழங்கப்படுகிறது.
  • 4 மீட்டர் வரை வளரக்கூடியது.
  • ஆடாதோடா முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்டாலும் ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.

E_1374641912

 

  • ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவத்தில் இதன்பங்கு அளப்பரியதாகும். குறிப்பாக சுவாச நோய்கள், சளி, இருமல், ஆஸ்துமா, தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக பரிந்துரைக்கப்படுகிறது.
  • ஆயுர்வேதத்தில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுகிறது.
  • இத்தாவரத்தில் காணப்படும் வாசிசின் என்ற மருந்துப் பொருளே இதன் மருத்துவ குணத்துக்கு காரணமாக விளங்குகிறது. இலைப்பகுதியிலே அதிகம் காணப்படுகிறது.
  • தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத்திலும் காணப்படுகிறது. வீடுகளில் அழகு செடியாகவும் வளர்க்கலாம். இலைகள் கசப்புத்தன்மை கொண்டவை.
  • இதனை வெல்லத்துடன் கலந்து கசாயமாக்கி அருந்துவதால் மூச்சுத்திணறல் குணமாகும். வீட்டுத்தோட்டம் மற்றும் வயல்களில் உயிர்வேலியாக நடலாம்.

உயிர் வேலியாய் அமைப்பதன் பயன்கள்:

  • இதனுடைய இலை, தண்டு, வேர் முதலியன மருத்துவ குணம் கொண்டது. கால்நடைகள் இதனை உண்ணாது.
  • இது நீண்ட இலைகளையும் நன்கு அடர்த்தியாகவும், எப்போதும் பசுமையாகவும் வளர்ந்து சிறந்த வேலியாக பயன்படுகிறது.
  • வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது.
  • எல்லா வகை காலநிலை மற்றும் மண்ணில் வளரக்கூடியது.
  • இதனுடைய காய்ந்த இலை மூலிகை கம்பெனிகளால் கொள்முதல் செய்யப்படுவதால் சந்தைப்படுத்துதல் எளிது.
  • இத்தாவர இனப்பெருக்கம் தண்டினை வெட்டி நடுவதன் மூலம் எளிய முறையிலே வளர்க்கலாம்.
  • மேலும் நெல் வயலில் ஆடாதோடா இலையும் மண்ணோடு கலந்து உழப்படுகிறது. இதனால் மண் வளம் பெருகி, பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது.
  • கேரளாவில் தென்னையில் ஊடுபயிராகவும் உயிர்வேலியாகவும் பயிரிட வேளாண்மை துறையினரால் பரிந்துரைக்கப்படுகிறது.

சாகுபடி:

  • ஆடாதோடாவின் முதிர்ந்த தண்டானது 15-20 செ.மீ. அளவுக்கு நறுக்கப்பட வேண்டும். அதில் 3-4 கணுக்கள் இருக்க வேண்டும்.
  • வெட்டப்பட்ட தண்டானது குப்பை மற்றும் மண் கலந்த பாலிதீன் பைகளில் நடவேண்டும்.
  • 2 மாதங்களுக்கு பின் பாலிதீன் பைகளில் இருந்து பிரிக்கப்பட்டு தரையில் நடலாம்.
  • தொழு உரம் அவசியம். ஆரம்ப காலங்களில் நீர் பாய்ச்சுவதும், களை நீக்குவதும் அவசியமாகும்.
  • மழைக்காலத்தில் இலைப்புள்ளி நோய் தாக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்நேரத்தில் பாதிக்கப்பட்ட இலைகளை நீக்குவதன் மூலமாகவோ அல்லது 1% போரடியாக்ஸ் கலவையை தெளிப்பதன் மூலமாகவோ நீக்கலாம்.

அறுவடை:

  • நட்ட 6 மாதத்தில் இலைகளை அறுவடை செய்யலாம்.
  • வேரானது ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்பே அறுவடை செய்யப்பட வேண்டும். இலைகளை கைகளைக் கொண்டு ஒவ்வொன்றாகப் பறிக்க வேண்டும். உருவக் கூடாது.
  • ஆகஸ்ட்-அக்டோபர் மாதங்களில் இலைகளில் அதிக மருந்துச்சத்து கண்டறியப்பட்டுள்ளதால் அறுவடைக்கு அதுவே சிறந்த காலமாகும்.
  • அறுவடை செய்யப்பட்ட இலைகளை 2-3 நாட்களுக்கு நிழலில் நன்கு காயவைக்க வேண்டும்.
  • காய்ந்த இலைகளில் ஈரப்பதம் 8%க்கு மிகாமல் இருக்க வேண்டும். காய்ந்த இலைக்காம்புகள் அனுமதிக்கப்படுகிறது. முற்றிய தண்டுப்பகுதிகள் நீக்கப்பட வேண்டும்.
  • இன்று எல்லா மூலிகைகம்பெனிகளுக்கும் ஆடாதோடா தேவை என்பதால் இதனை பயிரிடுவது வருமானம் தருவதாக அமையும்.
  • மேலும் நிலைத்த அறுவடை பின்பற்றப்பட வேண்டும். ஆடாதோடா இனமானது அழியும் தருவாயில் உள்ளதால் முடிந்தளவு வேரோடு அறுவடை செய் வதைத் தவிர்க்க வேண்டும்.

என்.கணபதிசாமி,
திருமங்கலம், மதுரை-625 706.
08870012396.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *