பர்மா தேக்கை சாகுபடி செய்யும் வாலிபர்: ஊடு பயிராக வாழையும் சாகுபடி

விவசாய நிலத்தில்,பர்மா தேக்கை நடவு செய்து, பராமரித்து வருகிறார் காஞ்சிபுரத்தை சேர்ந்த பட்டதாரி வாலிபர்.

காஞ்சிபுரம் அடுத்துள்ள முசரவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நந்தா, 27. பி.காம்., பட்டதாரி. இவ ருக்கு சொந்தமான 10 ஏக்கர் விளை நிலத்தில், நெல், வேர்கடலை, கேழ்வரகு உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை சாகுபடி செய்து வருகிறார்.

இதுகுறித்த நந்தா கூறியதாவது:

  • பர்மா தேக்கு கன்றுகளை, இந்துஸ்தான் பையோ டெக் நிறுவனத்தாரிடம் இருந்து வாங்கி வந்து நடவு செய்துள்ளேன். ஒரு செடியின் விலை 60 ரூபாய்.
  • கடந்த 2008ம் ஆண்டு, ஒவ்வொரு கன்றுக்கும் 6 அடி இடைவெளி விட்டு நடவு செய்தேன்.
  • 20 நாட்களுக்கு ஒரு முறை, தண்ணீர் பாய்ச்சுகிறேன்.
  • இவற்றை நடவு செய்தது முதல், 12 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும்.
  • அவ்வப்போது இதில் உள்ள பக்க கிளைகளை அகற்ற வேண்டும்.
  • நான்கு ஆண்டுகளில், 30 அடி உயரம் கன்றுகள் வளர்ந்துள்ளன.
  • நாட்டு தேக்கு மரத்தை விட, இந்த பர்மா தேக்கு வீரியமாக வளர்கிறது.
  • நடவு செய்தது முதல், 12வது ஆண்டில், மரமாகி விற்பனை செய்யும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துவிடும்.
  • ஒவ்வொரு மரமும் லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் என, எதிர்பார்க்கிறேன்.
  • பர்மா தேக்கு கன்றுகள் நடவு செய்யப்பட்ட விவரத்தை, கிராம நிர்வாக அதிகாரிக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தேன்.
  • தேக்கு கன்றுகளுக்கு இடையே வாழை கன்றுகளை, ஊடு பயிராக நடவு செய்துள்ளேன். அவையும் வீரியமாக வளர்ந்து வருகின்றன.
  • 10வது மாதத்தில் பூவிட்டு காய்க்க கூடியவை. ஒரு தார், 150 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை விற்கலாம்.இவ்வாறு, நந்தா தெரிவித்தார்.

நன்றி: யாஹூ 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

5 thoughts on “பர்மா தேக்கை சாகுபடி செய்யும் வாலிபர்: ஊடு பயிராக வாழையும் சாகுபடி

  1. ARULKUMAR says:

    I want 1000 Burma teak plant and plant nursery contact number and address give to me in near by Kallakkurichi , villuppuram dist

  2. Ravi Balakrishnan says:

    I need1000 Burma teak plants,kindly send me the nursery’s contact number and address. Thanks.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *