அழிந்து வரும் அபூர்வ வடுமாங்காய்

என்னுடைய சிறிய வயதில்  மார்ச் மாதம் வடு மாங்காய் தெருவில் விற்பனைக்கு வரும். படி அளவில் வாங்கி உப்பில் சேர்த்து ஊற வைப்பார்கள். சில மாதம் ஊறியவுடன் சுவையான மாவுடு  கிடைக்கும். வருடம் முழுவதும் இந்த ஊறுகாய் இருக்கும். அதன் சுவையே அலாதிதான்..

இப்போதெல்லாம் இந்த வடு மாங்காய் பார்பதே அபூர்வம் ஆகி வருகிறது. இந்த செய்தியை  படித்த உடன் தான் தெரிந்தது, வடு மாங்காய், நம் நாட்டில் அழிந்து வரும் ஒரு பயிர் இனம் என்று.. நம்முடைய சந்ததியினர் இப்படி பட்ட சுவையானவற்றை உண்ண அதிருஷ்டம் இருக்கும் என்று .நம்புவோம்… தினமலரில் வந்த செய்தி….

வடுமாங்காய் பற்றிய ஆராய்ச்சியை பெங்களூருவில் உள்ள தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாம்பழத்தில் பல வகைகள் உள்ளன. அல்போன்சா, கல்லாமை, கிரேப்ஸ், மல்கோவா, காசாலட்டு உள்ளிட்ட பல ரகங்கள் உள்ளன. இந்த ரகங்கள் தேனி மாவட்டத்தில் பெரியகுளம், கம்பம், போடி, கூடலுார் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது.ஆனால் ஊறுகாய்க்கு பயன்படுத்தப்படும் வடுமாங்காய் பெரியகுளம் பகுதியில் சோத்துப்பாறை, மஞ்சளாறு அணைப்பகுதிகள், சுருளி, கம்பம்மெட்டு மற்றும் போடிமெட்டு மலைப்பகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டும் கிடைக்கிறது.

வடுமாங்காய் சாகுபடி செய்யப்படுவது கிடையாது. வனப்பகுதிகளில் மானாவாரியாக விளையக் கூடியது.இவ்வகை மாங்காய்களை பழமாக மாற்றி சாப்பிட முடியாது. ஊறுகாய்க்கென பிரத்யேகமானது. இதற்கென தனி மார்க்கெட் உள்ளது.பெங்களூருவில் உள்ள தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தில் வடுமாங்காய் பற்றிய ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தின் மலையடிவாரங்களில் கிடைக்கும் வடுமாங்காய் இலை, குச்சி போன்றவற்றை பெங்களூருவில் இருந்து வந்திருந்த தேசிய தோட்டக்கலை விஞ்ஞானி சங்கரன் சேகரித்து சென்றுள்ளார்.

வடுமாங்காய் மிகவும் அபூர்வமானது. இவ்வகை மாங்காய்கள் வனப்பகுதிகளிலும், மலையடிவாரங்களிலும் மானாவாரியாக விளையும். சாகுபடி செய்வது கடினம். இதனுடைய பூர்வீகம் என்ன என்பது பற்றிய மரபணு ஆராய்ச்சி ஒன்றை தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் மேற்கொள்ள உள்ளது. வடுமாங்காய் இனம் அழிந்து வரும் இனமாக இருப்பதால், இவ்வகை மா சாகுபடியை காப்பாற்ற திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது, என்றனர்.

நன்றி: தினமலர்

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “அழிந்து வரும் அபூர்வ வடுமாங்காய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *