மாம்பழ டிப்ஸ்!!

  • நல்ல விலை கிடைக்கும் என்று பழுக்கத மாங்காயை அறுவடை செய்யாதீங்க. அப்படி செய்தால் அந்த காய்களை தண்டு அழுகல் நோய் தாக்கும். இப்படி தாக்குதல் ஆளான காய்களை மற்ற காய்களோடு சேர்த்து வைத்தால், அவையும் பாதிக்க படும்!!
  • மாமரங்களை வௌவால்கள் இரவில் ஒரு கை பார்த்து விடும்! கொஞ்சமாக சாப்பிட்டாலும், கடித்து அதிக சேதம் செய்து விடும்! இதை தடுக்க மாந்தோப்பில் இரண்டு அல்லது மூன்று சிங்கப்பூர் செர்ரி மரத்தை நடவு செய்யுங்க! வௌவால்கள்களுக்கு இந்த பழம் என்றால் ரொம்ப பிடிக்கும். இந்த பழத்தை சாப்பிட்டு விட்டு மாம்பழங்களை விட்டு விடும். வௌவால்கள் உள்ள இடங்களில் உள்ள எல்லா பழ தோட்டங்களிலும் இதை பயன் படுத்தலாம்
  • மாம்பழத்தோட காம்பு தளர்ச்சி அடைந்து பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறி இருந்தால் மட்டுமே அறுவடை செய்யுங்கள். இந்த அறிகுறி, மா பழுக்க ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம்
  • மாம்பழத்தின் காம்பு மூன்று அங்குல நீளம் விட்டு நறுக்கவும். இப்படி செய்தால் தான், மாம்பழத்தின் பால் பழத்தின் மேல் விழாமல் இருக்கும. பால் பட்டு விட்டால் அந்த இடம் கருப்பாக மாறிவிடும். இந்த பழங்களுக்கு அதிக விலை கிடைக்காது
  • மாம்பழத்தை அறுவடை செய்த பின், நிழலான ஒரு இடத்தில கொட்டி வையுங்க! சூரிய ஒளி பட்டால் பழங்கள் சீக்கிரம்  பழுத்து விடும். சாக்கு பையில் வைக்க கூடாது. அப்படி செய்தால், பழங்கள் அடிபட்டு அழுக ஆரம்பிக்கும். மூங்கில் கூடை, பிளாஸ்டிக் கூடைகளில் தான் அவற்றை வைக்க வேண்டும்
  • தயவு செய்து கால்சியம் கார்பைட் போன்றவற்றை மாம்பழங்களை பழுக்க வைக்க பயன் படுத்த வேண்டாம். ஆவாரம் பூக்களையும், இலைகளையும் மாம்பழத்தோடு போட்டு வையுங்க. இப்படி செய்தால் பழங்கள் சீக்கிரமாக பழுப்பது மட்டும் இன்றி, தங்க நிறத்திலும் நல்ல வாசனை உடனும் இருக்கும்!

நன்றி: மண்புழு மன்னரு, பசுமை விகடன், 25.06.10 இதழ்

மா பற்றிய மற்ற செய்திகளை இங்கே படிக்கலாம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “மாம்பழ டிப்ஸ்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *