மனிதன் அழித்து வரும் மிருகங்கள் – II

பர்மா நட்சத்திர ஆமை (Burma Star Tortoise)

Courtesy: Guardian
Courtesy: Guardian

பார்க்க அழகாக பிறந்தது தான்  சாதுவான ஆமை செய்த பாவம். செல்ல பிராணியாக வைத்து கொள்ளவும் கொன்று தின்னவும் வேட்டை ஆட பட்டு இப்போது எண்ணிகையில் குறைந்து விட்டது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஒரு ஆமை ஆயிரக்கணக்கான டாலர்கள் விலை போகுமாம்!

ஜாவா லோரிஸ் (Java Slow Loris)

Courtesy: Guardian
Courtesy: Guardian

லோரிஸ் எனப்படும் இந்த மிருகம மரங்களின் இலைகளை தின்று வாழும் அமைதியான ஒன்று. ஆனால் பார்க்க வித்தியாசமாக இருப்பதால் செல்ல பிராணியாக வளர்க்க காடுகளில் இருந்து பிரிக்க படுகிறது. இப்போது அடர்ந்த காடுகளில் சில எண்ணிக்கையில் மட்டுமே காணபடுகிறது. இந்தோனேசியாவில் ஜாவா எனப்படும் தீவின் காடுகளில் மட்டுமே இவற்றை அதிருஷ்டம் இருந்தால் காணலாம்

 

ஒற்றை கொம்பு காண்டாமிருகம் (One Horned Rhinoceroses)

Courtesy: Guardian
Courtesy: Guardian

இந்தியாவில் மட்டுமே காணப்படும் இந்த மிருகம் அசாமில் காசிரங்கா எனப்படும் தேசிய பூங்காவிலும் மானஸ் எனப்படும் தேசிய பூங்காவில் மட்டுமே காணபடுகிறது. பிரமபுத்ரா ஆற்றின் கரையில் வளரும் 8 அடி உயர புல்வளி இதன் இருப்பிடம். சீனாவில் ஆண்மை அதிகரிக்கும் மருத்துவத்தில் காண்டாமிருகத்தின் கொம்பு தேவை படுவதால், பணக்கார சீன ஆண்கள் தேவைக்காக இவை கொடூரமாக கொல்லப்பட்டு கொம்பு மட்டும் எடுத்து சீனாவிற்கு கடத்த படுகிறது. 2014 ஆண்டில்  மட்டும் அசாமில் 24 காண்டாமிருகங்கள் கொலை செய்ய பட்டன.

நம்முடைய  செய்தி தாள்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் கொடூரமான கொலைகளை “மிருகத்தனமான கொலைகள்” என்று கூறுவர்

இப்போது சொல்லுங்கள்,மனிதனை விட மோசமான கேவலமான கொடுர கொலைகாரன் உண்டா?


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *