பச்சை மிளகாய் பயிரில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படி

பச்சை மிளகாய் புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது.

பச்சை மிளகாயில் கோவில்பட்டி-1 (கே-1), கோவில்பட்டி-2 (கே-2), கோயம்புத்தூர்-1(சிஓ-1), கோயம்புத்தூர்-2 (சிஓ-2), கோயம்புத்தூர்-3 (சி.ஓ.3), கோயம்புத்தூர்-4 (சி.ஓ.-4) என்ற ரகங்களை பயிரிடுவது சிறந்தது.

  • மிளகாய் ஆண்டுக்கு மூன்று பருவங்களில் பயிரிடப்படுகிறது.
  • ஜனவரி, பிப்ரவரி (தை மாதம்), ஜூன், ஜூலை (ஆடி), செப்டம்பர், அக்டோபர் (புரட்டாசி) ஆகிய மாதங்களில் பயிரிடப்படுகிறது.
  • இவ்வாறு மிளகாய் செடியில் நன்றாக பூ எடுக்க பொட்டாசியம் சல்பேட் 10 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும்.
  • இவ்வாறு தெளிப்பதால் பூ நன்றாக எடுப்பதுடன் நன்றாக துளிரும் வரும்.நோய் எதிர்ப்புத் தன்மை கிடைக்கும். தரமான மிளகாய் கிடைக்கும்.
  • இதேபோல் என்.ஏ.ஏ. (நாப்தலின் அசிட்டிக் அமிலம்) ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் கலந்து தெளிக்கலாம். இதை நடவு நட்ட நாளில் இருந்து 30 நாளுக்கு ஒருமுறை 3 முறை தெளிக்கலாம்.
  • இதேபோல் டிரை கார்டினாலை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 25 மில்லி கலந்து தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்தால் காய் நன்றாக வரும்.

நன்றி: தினமணி

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *