செடி முருங்கையில் சாகுபடி

கரூர் கிருஷ்ணராயபுரம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் உள்ளதாவது:

  • செடி முருங்கை சாகுபடி செய்ய நவம்பர், டிசம்பர் மாதங்கள் மிகவும் ஏற்றது.
  • செடி முருங்கை எல்லா மண் வகையிலும் வளரும். எனினும் மணல் கலந்த செம்மண் அல்லது கரிசல் பூமி மிகவும் ஏற்றது.
  • மண்ணில் கார அமிலத்தன்மை ஆறு முதல் 7.5 வரை இருக்க வேண்டும்.
  • முருங்கை சாகுபடி செய்ய பி.கே.எம்.,1, 2, கே.ம்.,1 ரகங்களை தேர்வு செய்து நடவு செய்யலாம்.
  • ஒரு ஏக்கருக்கு 200 கிராம் விதை போதுமானது.
  • இதற்கு நிலைத்தை நன்கு உழுது செய்து பின் 2.5 மீட்டர் இடைவெளியில் 45:45:45 செ.மீ., நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகள் எடுக்க வ்ணடும்.
  • குழிகளை ஒருவாரம் ஆறப்போட்டு விட்டு பின் குழி ஒன்றுக்கு நன்கு மக்கிய தொழுஉரம் 15 கிலோ மற்றும் மேல் மண் ஆகியவற்றை சம அளவில் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும்.
  • குழிகளை சுற்றி 60 செ.மீ., அகலத்துக்கு நீர் பாச்சுவதுக்கு வாய்க்கால் அமைக்க வேண்டும்.
  • குழிகளின் மத்தியில் மூன்று செ.மி., ஆழத்தில் விதைகளை விதைக்க வேண்டும்.
  • ஒரு குழியில் ஒன்று அல்லது இரண்டு விதைகளை விதைக்க வேண்டும்.
  • விதைத்த 7 முதல் 10 நாட்களுக்குள் விதைகள் முளைக்கும். விதைப்பதற்கு முன் மூடிய குழிகளில் நீர் ஊற்ற வேண்டும்.
  • விதைத்த மூன்றாம் நாள் மீண்டும் நீர் பாய்ச்ச வேண்டும்.
  • செடி ஒன்றுக்கு 100 கிராம் யூரியா, 100 கிராம் சூப்பர் பாஸ்பேட், 30 கிராம் பொட்டாஷ் ஆகிவற்றை விதைத்த மூன்றாவது மாதத்தில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
  • ஆறாவது மாதத்தில் யூரியா மட்டும் ஒரு செடிக்கு 100 கிராம் இட வேண்டும்.
  • செடிகள் ஒரு மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் கிள்ளி விட வேண்டும்.
  • இவ்வாறு செய்தால் பக்க கிளைகள் அதிகம் தோன்றும். இதனால் மகசூல் கிடைக்கும்.
  • செடி முருங்கையில் பழ ஈக்ககளின் குஞ்சுகள் காயைத்தின்று சேதப்படுத்தும். இதனை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
  • பென்தியான், டைக்குளோர்வாஸ் மானோகுரோட்டோபாஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒரு மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • மருந்து தெளிப்பதற்கு முன் காய்களை பறித்துவிட வேண்டும். மருந்து தெளித்த பத்து நாட்களுக்கு அறுவடை செய்யக்கூடாது.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *