முருங்கையை தாக்கும் பழ ஈ கட்டுபடுத்துவது எப்படி?

செடி முருங்கை சாகுபடியில் முருங்கைக்காய்களை தாக்கும் முக்கிய பூச்சி பழ ஈக்கள் ஆகும்.

  • “ ட்ரோசொமிலா” என்ற சிறிய வகை பழ ஈக்கள் முருங்கைப் பிஞ்சுகளை தாக்கி சேதம் விளைவிக்கின்றன.
  • மஞ்சள் நிறத்தில், சிவப்பு நிற கண்களை கொண்ட இந்த ஈக்கள், 1 மில்லி மீட்டர் முதல் 2 மில்லிமீட்டர் அளவுள்ள மிகச்சிறிய ஈக்கள் முருங்கை பிஞ்சுகள் காய்த்து வளர ஆரம்பிக்கும்போது பிஞ்சுகள் காய்த்து வளர ஆரம்பிக்கும் போது பிஞ்சுகளின் மெல்லிய தோல்களில் முட்டையிடும்.
  • இரண்டு, மூன்று நாட்களில் வெளிவரும் கால இல்லாத வெண்மைநிற புழுக்கள் திசுக்களை சாப்பிடும். இந்த தாக்குதல் பிஞ்சின் நுனிப்பகுதியில் இருந்து தொடங்கும்.
  • தாக்கிய பகுதிகளில் இருந்து காபி நிறத்தில் பிசின் போன்ற திரவம் வடிய தொடங்கி, நுனிப்பகுதியை மூடிவிடும்.  எனவே தாக்குதலுக்குள்ளான முருங்கைக்காய் பிஞ்சுகள் சுருங்கி, வெம்பி, அழுகி காய்ந்து விடும்.
  • காய்களில் பிளவுகள், துரநாற்றம் வீசும்.  7 முதல் 10 நாட்கள் வரை வளர்ந்த புழுக்கள் காய்களில் இருந்து நிலத்தில் விழுந்து கூட்டுப்புழுக்களாக மாறி, அடுத்து காய்க்கும் பருவம் வரை நிலத்தில் உறக்க நிலையில் இருக்கும்.
  • கூட்டுப்புழுக்கள் தாய் ஈக்களாக மாறி மீண்டும் சேதத்தை விளைவித்து வாழ்க்கை சுழற்சியை தொடங்கும்.

கட்டுப்படுத்தும் வழி முறைகள்

  • பாதிக்கப்பட்ட பிஞ்சுகளை முழுவதுமாக சேகரித்து மண்ணில் புதைத்தோ, அல்லது நன்கு தீயிட்டு எரித்து விட வேண்டும்.
  • மண்ணில் கூட்டுப்புழுக்களை வெளிக்கொண்டுவர இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்து காய விட வேண்டும்.
  • காய்களின் மீது ஈக்கள் அமர்ந்து முட்டையிடுவதை தடுக்க 3 சதவீத வேப்ப எண்ணை கரைசல் தெளிப்பு செய்ய வேண்டும்.
  • முருங்கை பூக்கும் தருணம், மாலத்யான் 2 மில்லி மருந்துக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பிஞ்சு வளர ஆரம்பித்த 20 முதல் 30 நாட்களில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி அளவு பென்தியான் அல்லது ஒரு லிட்டருக்கு 2 கிராம் கார்பரில் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • பின்னர் 15 நாட்கள் இடைவெளி கழித்து டைகுளோர்வாஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 1 மில்லி அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
  • மருந்து தெளித்த ஒரு வார காலத்திற்கு காய்களை அறுவடை செய்யக்கூடாது.  ஏனெனில் பூச்சி மருந்தின் எஞ்சிய நஞ்சின் வீரியம் நமது உடல் நலத்தை பாதிக்கும்.

தகவல் மூலம் : தினத்தந்தி 7.7.2011 வேளாண்மைச்செய்திகள்

நன்றி: ஜாம்ஷெட்ஜி டாடா தேசிய நிறுவனம் (Jamshedji Tata National Virtual Academy)


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *